$
Newborn Stomach Bloating Causes And Treatment: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் பராமரிப்பை கவனிப்பது அவசியமாகும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடல்நிலை குறித்த கவலையில் இருப்பர். ஆனால் இந்த உடல்நிலை குறித்த காரணங்களை அறிந்தால், சிக்கலைத் தவிர்ப்பது எளிதாகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கு வயிறு வீக்கம் அடிக்கடி உண்டாகும் பிரச்சனை ஆகும்.
சில சமயங்களில் குழந்தைகள் தங்கள் திறனை விட அதிகம் பால் குடிக்கும் போது அல்லது அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைக்கு வயிறு வீக்கம் உண்டாகலாம். இது பாலில் உள்ள லாக்டோஸ் அமிலமே காரணமாகும். இதனால் குழந்தையின் வயிற்றில் மலச்சிக்கல் ஏற்பட்டு மல கழிப்பதில் பிரச்சனை ஏற்படலாம். பிறந்த குழந்தைக்கு இந்த பிரச்சனை இருப்பின், சில எளிய தீர்வுகளைக் கையாளலாம். இந்த தீர்வுகள் குறித்து லக்னோ டஃபெரின் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சல்மான் கான் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Sunlight Benefits: புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியம் தெரியுமா?
குழந்தை வயிறு வீக்கத்திற்கான காரணங்கள்
- குழந்தைகளுக்கு வாய்வு பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், வயிற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், மற்றும் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைக் கொண்ட நீராவியில் இருந்து வாயு உருவாகிறது. இது கடுமையான வயிற்றுவலியை ஏற்படுத்துவதால் குழந்தை அழத் தொடங்குகிறது.
- குறிப்பாக குழந்தைக்கு அதிக நேரம் பால் ஊட்டுவதால், குழந்தைக்கு வாய்வு பிரச்சனை ஏற்படலாம். ஏனெனில், குழந்தையின் செரிமான அமைப்பு பாலை விரைவாக செரிமானம் செய்யும் அளவுக்கு சக்தி இல்லை.
- பாலில் லாக்டோஸ் இருப்பதால், இதன் அதிகப்படியான நுகர்வு வாய்வுவை ஏற்படுத்தும்.
- பால் குடித்த பிறகு குழந்தை அழுகிறது எனில், வயிற்று வலி மட்டுமல்லாமல் வாய்வு பிரச்சனையும் இருக்கலாம்

பிறந்த குழந்தையின் வயிறு வீக்கத்திற்கான அறிகுறிகள்
- குழந்தைக்கு உணவளித்த பின்பு அழுகிறது எனில், அவர்கள் வாயு அல்லது வயிறு சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம்.
- வாயு அல்லது வயிறு பிரச்சனையின் அறிகுறியாகவும், குழந்தை பால் குடிக்காமல் போகலாம்.
- குழந்தையின் வயிறு இயல்பை விட பெரியதாக தோன்றினால், அது வாய்வுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
- குழந்தைக்கு நீண்ட காலமாக துர்நாற்றம் அல்லது விக்கல் இருப்பின், அவை வாய்வுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
- பாலூட்டும் போது குழந்தைக்கு பால் செரிக்காத போது அல்லது குழந்தை பாலை வெளியேற்றுவது போன்றவை வயிறு வீக்கத்திற்கான அறிகுறிகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Baby Face Massage: குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் செய்ய போறீங்களா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க.
வாய்வு பிரச்சனையிலிருந்து குழந்தையை பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்வு பிரச்சனையைத் தடுக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- குழந்தைக்குப் பாலூட்டிய பிறகு, குழந்தையின் முதுகில் தட்ட வேண்டும். இது வயிற்று வாயு பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது.
- புதிதாக பிறந்த குழந்தையையும் பர்ப் செய்வது முக்கியமாகும். இதில் அவர்களை தோளில் சுமந்து கொண்டு பர்ப் செய்வது குழந்தைக்கு வாய்வு பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.
- குழந்தைக்கு வாய்வு பிரச்சனை இருப்பின், பெருங்காயத்தை தொப்புளில் தடவலாம். இதற்கு முதலில் பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் சூடாக்கி, பின் குழந்தையின் தொப்புளில் கிரீம் போல தடவவும். இது வாய்வு பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.
- குழந்தையின் வயிறு வீங்கியிருப்பதாக உணர்ந்தால், குழந்தையின் வயிற்றில் மசாஜ் செய்ய வேண்டும்.
- குழந்தைக்கு இடையிடையே உணவு கொடுக்கலாம். ஒரே நேரத்தில் அதிக நேரம் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. இது குழந்தைக்கு வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும்.

இது தவிர, புதிதாக பிறந்த குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Baby Kissing: பிறந்த குழந்தைக்கு முத்தமிடுவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கா?
Image Source: Freepik