Expert

Newborn Baby Kissing: பிறந்த குழந்தைக்கு முத்தமிடுவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கா?

  • SHARE
  • FOLLOW
Newborn Baby Kissing: பிறந்த குழந்தைக்கு முத்தமிடுவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கா?

பிறந்த குழந்தைக்கு முத்தமிடுவது தவறு. ஏன் தெரியுமா?

பொதுவாக குழந்தை பிறக்கும் போது, அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் பெரியவர்கள் அவர்களுக்கு முத்தமிடுவது சரியல்ல. ஏனெனில் இது குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுக்கள் மற்றும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தலாம். பெரியவர்கள் மட்டுமல்லாமல் தாயும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், முத்தமிடும் போது பாக்டீரியாக்கள் குழந்தையின் உடலில் நுழைந்து பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தலாம். இதில் குழந்தைகள் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பால் போராட முடியாது.

இந்த பதிவும் உதவலாம்: Almond Milk For Babies: இது தெரிஞ்சா இனி குழந்தைக்கு தினமும் பாதாம் பால் கொடுப்பீங்க.

புதிதாக பிறந்த குழந்தையை முத்தமிடுவதால் ஏற்படும் விளைவுகள்

நிபுணர்களின் கருத்துப்படி, புதிதாக பிறந்த குழந்தை அல்லது 10 வயதுக்குட்பட்ட குழந்தையை முத்தமிட்டால், அது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.

சரும பிரச்சனைகள்

இன்று பலரும் குறிப்பாக பெண்கள் உதடு மற்றும் முகத்தில் பல வகையான தோல் பராமரிப்புப் பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் அழகு சாதனப் பொருள்களில் பல்வேறு வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். சிறு குழந்தைகளின் சருமம் உணர்திறன் மிக்கதாக இருப்பதால் சொறி, சிவத்தல், அரிப்பு போன்ற பல வகையான பிரச்சனைகள் உண்டாகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பற்களில் துவாரங்கள்

சிலர் குழந்தையின் உதடுகளில் முத்தமிடுவர். ஆனால், இதில் பெரியவர்களின் உமிழ்நீர் குழந்தையின் வாயில் நுழையலாம். இதனால் உமிழ்நீரில் உள்ள ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியா, குழந்தையின் பற்களில் துவாரங்களை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, வயது வந்தவருக்கு ஏதேனும் வாய் தொடர்பான நோய் இருப்பின், அந்த கிருமிகள் குழந்தையின் உடலில் நுழையலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு இந்த பிரச்சனை இல்லாமல் இருக்க, பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க

காய்ச்சல்

பெரியவர்களுக்கு பொதுவாக காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படலாம். ஆனால், இது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே பெரியவர்கள் சளி, இருமல், காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் பருவகால பிரச்சனை இருந்தால், அவை குழந்தைக்கு முத்தத்தின் வழியாக பரவலாம். இதனால் காய்ச்சல் வைரஸ் குழந்தையின் உடலில் நுழையலாம். இது குழந்தைக்கும் காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

சுவாச நோய் பிரச்சனை

பொதுவாக பிறந்த குழந்தைக்கு சுவாச அமைப்பு உருவாக சுமார் 8 ஆண்டுகள் ஆகலாம். இந்த சூழ்நிலையில் குழந்தையின் உதடுகளில் முத்தமிடுவது, அவர்களுக்கு நுரையீரல் தொற்றுநோயை உண்டாக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு சுவாச நோய்க்கான ஆபத்து பன்மடங்காக அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sunlight Benefits: புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியம் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Newborn Care: புதிதாக பிறந்த குழந்தையை 1 வருடத்திற்கு எப்படி பாத்துக்கணும் தெரியுமா?

Disclaimer