Benefits of Kissing: முத்தம் கொடுப்பது உடல் எடையை குறைக்க உதவுமாம்!

  • SHARE
  • FOLLOW
Benefits of Kissing: முத்தம் கொடுப்பது உடல் எடையை குறைக்க உதவுமாம்!


Does Kissing Burn Calories: உலகம் முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று ( பிப்ரவரி 13) முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். சிலர் ப்ரோபோஸ் டே கொண்டாடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள், மற்றவர்கள் ஹக் டே கொண்டாடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலர், தங்களின் அன்பானவரை முத்தமிட்டு தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். உத்தமிடுவது உங்கள் ஆன்மாவுக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், முத்தமிடுவதால் மன அமைதியை தரும். அதுமட்டும் அல்ல, முத்தம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நீக்குகிறது. முத்தம் கலோரிகளை எரிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். முத்தம் உண்மையில் கலோரிகளை எரிக்கிறதா? என இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டின் மறைக்கப்பட்ட அறிகுறிகள்.!

முத்தம் உண்மையில் கலோரியை எரிக்குமா?

ஆம், முத்தம் உண்மையில் கலோரிகளை எரிக்கிறது. முத்தமிடுவதன் மூலம் எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது முத்தமிடும் முறை மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசின் ஆய்வின்படி, முத்தமிடுவதால் நிமிடத்திற்கு 5 முதல் 26 கலோரிகள் வரை எரிக்கப்படும். நீங்கள் உடலுறவு கொண்டால், அது அதிக கலோரிகளை எரிக்கிறது.

முத்தம் எப்படி கலோரிகளை எரிக்கிறது?

முத்தம் அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. ஆனால், இது அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி மட்டுமல்ல, முத்தம் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. ஒரு முத்தம் நிமிடத்திற்கு 5 கலோரிகளை எரிக்கும். இதனால், நீங்கள் மனதளவில் நன்றாக உணர்கிறீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Butter And Cholesterol: ஹை கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பட்டர் சாப்பிடுவது நல்லதா?

முத்தமிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • முத்தம் மன அழுத்த ஹார்மோனைக் குறைக்கிறது 'கார்டிசோல்'. இதனால், மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கும்.
  • முத்தம் கொடுத்தால் உடல் சோர்வையும் போக்கலாம்.
  • முத்தம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • முத்தம் வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Raw Onion For BP: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?

  • முத்தமிடுவது சருமத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Butter And Cholesterol: ஹை கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பட்டர் சாப்பிடுவது நல்லதா?

Disclaimer

குறிச்சொற்கள்