Raw Onion For BP: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?

  • SHARE
  • FOLLOW
Raw Onion For BP: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?


Raw Onion To Control High BP: மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. அதே சமயம், உயர் இரத்த அழுத்த அபாயமும் அதிகரிக்கிறது. குறை இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பல ஆபத்தான நிலைமைக்கு நம்மை தள்ளும்.

இந்த கடுமையான சிக்கல்களை தவிர்க்க, உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பச்சை வெங்காயம் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். இது உண்மையா? இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாக பாதிக்கும் காரணிகள் என்னென்ன தெரியுமா?

வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளில் வெங்காயமும் ஒன்று. இது இல்லாமல் எந்த சமையலும் முழுமையடையாது. பிரியாணியில் துவங்கி சாம்பார், குழம்பு, பொரியல் என சாலட் வரை பயன்படுத்தப்படுகிறது.

வெங்காயம் உணவின் சுவையை அதிகரிக்க உதவுவது போல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வெங்காயத்தில் உள்ள பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி இது குறித்து கூறுகையில், வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி உள்ளிட்ட பல பண்புகள் உள்ளன.

இந்த பதிவும் உதவலாம் : Blood Pressure Remedies: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்!

அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். வெங்காயத்தை பச்சையாக உட்கொள்வதால் தமனிகள் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹை BP உள்ளவர்கள் வெங்காயத்தை எப்படி சாப்பிடுவது?

பச்சை வெங்காயம் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதய நோயாளிகளும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம்.

ஆனால், சீரான அளவில் மட்டுமே வெங்காயத்தை சாப்பிட வேண்டும். இல்லையெனில் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உயர் இரத்த அழுத்தம் என்பது வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் தொடர்பான காரணிகளால் ஏற்படும் ஒரு தீவிர பிரச்சனையாகும். உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை எப்போதும் புறக்கணிக்க கூடாது.

இந்த பதிவும் உதவலாம் : Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் காரணமாக, உடல் பல கடுமையான பிரச்சினைகளுக்கு பலியாகலாம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Climate Change Impact: காலநிலை மாற்றத்தால் மூளை பாதிக்கப்படுமா.?

Disclaimer