Best Yoga To Reduce Blood Pressure: குளிர்காலத்தில் பலரும் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திப்பர். இந்த காலநிலையில் உடல் உழைப்பின்மை, உணவுமுறையில் மாற்றம் போன்றவை இதயத்தில் அதிக இரத்த அழுத்தம் இருப்பதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே அதிக இரத்த அழுத்தம் கொண்டவர்கள், குளிர்காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
குளிர்ந்த காலநிலையில் இரத்த அழுத்தம் தினமும் அதிகமாக இருப்பின், அவை சிறுநீரகங்கள் மற்றும் உடலின் பிற உறுப்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். இதில் குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த அழுத்தத்தைக் குறைக்க எந்த ஆசனம் செய்யலாம் என்பது குறித்து யோகா ஆசிரியர் ரஜ்னீஷ் ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Shashankasana Benefits: உடல் எடை மட்டுமல்ல இந்த பிரச்சனைக்கும் சூப்பர் தீர்வைத் தரும் ஷஷாங்காசனா!
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்த யோகா செய்யலாம்?
அதோ முக ஸ்வனாசனா
குளிர்காலத்தில் தினந்தோறும் அதோ முக ஸ்வனாசனா பயிற்சி செய்வது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இந்த ஆசனம் செய்வது தோல் மற்றும் கூந்தலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த ஆசனம் செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும். அதன் படி, அதோ முக ஸ்வனாசனம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவுகிறது.
விபரீதகரணி ஆசனம்
இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். இவற்றைத் தினமும் செய்து வருவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக மனதை அமைதியாக வைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் விளைவாக சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இவை உடலின் ஆற்றலை மேம்படுத்தி இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. விபரீதகரணி ஆசனம் செய்வது செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைத்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைக் குறைக்கிறது. விபரீதகரணி ஆசனத்தின் மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனையால் அவதியா? இந்த யோகாசனங்களை செய்யுங்க.
வீராசனம்
இந்த ஆசனத்தைத் தினமும் செய்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இந்த ஆசனத்தில் தொடைகள் மற்றும் முழங்கால்களுக்கு உடற்பயிற்சி செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து செய்து வருவது உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கலாம். தினமும் விராசனம் செய்து வருவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. நல்ல பலன்களைப் பெற இந்த ஆசனத்தைத் தினமும் காலையில் செய்யலாம்.
இந்த வகை ஆசனங்களை மேற்கொள்வது உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. எனினும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் முதலில் மருத்துவர் அல்லது யோகா பயிற்றுவிப்பாளரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே இந்த ஆசனங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga For Acid Reflux: ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட இந்த யோகாசனங்களை செய்யுங்க
Image Source: Freepik