What Yoga Poses Are Good For Acid Reflux: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் பலரும் பல வகையான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்று ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆகும். ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அல்லது GERD என அழைக்கப்படுகிறது. இந்த ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையில் வயிற்றில் உற்பத்தியாகக் கூடிய அமிலம் மீண்டும் உணவுக்குழாயை நோக்கி வருகிறது.
இஹனால், அடிக்கடி புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல், வாந்தி அல்லது குமட்டல், வாயில் அழுக்கு நீர் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் மக்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இதன் அதிகப்படியான நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது அவசியமாகும். ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் யோகாசனங்கள் குறித்து யோகா பயிற்றுவிப்பாளர் கிருஷ்ணா ராணா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Morning Meditation Benefits: காலையில் தியானம் செய்பவரா நீங்கள்? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ்க்கான யோகாசனங்கள்
ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட செய்ய வேண்டிய யோகாசனங்கள் குறித்து காணலாம்.
ஹலாசனா
- இந்த ஆசனம் செய்ய, முதலில் முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- இதில் கைகளை உடலுக்கு நெருக்கமாகவும், உள்ளங்கைகள் தரையில் எதிர்கொள்ளுமாறும் வைக்க வேண்டும்.
- பிறகு சுவாசிக்கும் போது மெதுவாக கால்களை உயர்த்தி 90 டிகிரி கோணத்தில் வைக்கவும். இப்போது முதுகும் உயர்த்தப்பட வேண்டும்.
- பின் மெதுவாக கால் விரல்களை தரையில் தொட முயற்சிக்க வேண்டும். இந்நிலையில் சாதாரணமாக சுவாசிக்க வேண்டும்.
- வசதிக்காக, கைகளை இடுப்புக்கு பின்னால் வைத்துக் கொள்ளலாம்.
- இந்நிலையில் 30-60 விநாடிகள் இருந்து பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பலாம்.

வஜ்ராசனம்
- இந்த ஆசனம் செய்ய முதலில் தரையில் முழங்காலில் உட்கார வேண்டும்.
- பின் முதுகெலும்பு மற்றும் தலையை நேராக வைத்துக் கொண்டு, கைகளை முழங்கால்களில் வைக்க வேண்டும்.
- குதிகால்களை ஒருவருக்கொருவர் சற்று தள்ளி வைக்க வேண்டும்.
- பிறகு கண்களை மூடிக் கொண்டு சாதாரண சுவாச நிலையில் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க முயற்சிக்கவும்.
- பின் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Japa Meditation Benefits: ஜப யோகா செய்வதில் இத்தனை நன்மைகளா? எப்படி செய்யணும் தெரியுமா?
பவன் முக்தாசனம்
- இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் மெதுவாக மூச்சு விட வேண்டும்.
- இப்போது இரு கால்களையும் ஒன்றாக உயர்த்தி, கால்களின் முழங்கால்களை வளைக்க வேண்டும்.
- பிறகு உங்கள் கால்களின் முழங்கால்களை மார்பை நோக்கி கொண்டு வந்து, வாய்க்கு அருகில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
- இப்போது இரு கைகளாலும் கால்கலைப் பிடித்துக் கொண்டு, கால்களின் முழங்கால்களால் மூக்கைத் தொட முயற்சிக்க வேண்டும்.
- இந்நிலையில் சுமார் 30-60 விநாடிகள் இருந்து, பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பலாம்.

உஸ்த்ராசனம்
- இந்த ஆசனம்செய்ய முதலில் தரையில் உட்கார்ந்து, முழங்கால்களை வளைத்து இரு கைகளையும் இடுப்பில் வைக்க வேண்டும்.
- பின் இரண்டு முழங்கால்களும் தோள்களுக்கு இணையாக இருக்க வேண்டும்.
- இந்நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து கீழ் முதுகுத்தண்டில் முன்னோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- இப்போது, தொப்புளில் முழுமையான அழுத்தத்தை உணரலாம்.
- அதன் பிறகு, கைகளால் கால்களைப் பிடித்து, இடுப்பை பின்னோக்கி வளைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்நிலையில் 30-60 விநாடிகள் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
- இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த யோகாசனங்களை தினமும் சிறிது நேரம் சேர்க்கலாம். எனினும், இந்த யோகாசனங்களை யோகா நிபுணர் அல்லது பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Arm Fat Reduce Yoga: கைகளில் தொங்கும் கொழுப்பைக் கரைக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.
Image Source: Freepik