அசிடிட்டியால் அவதியா? டக்குனு சரியாக இந்த ஒரு விதையை மட்டும் எடுத்துக்கோங்க

Does fennel seeds reduce acidity: அசிடிட்டி இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. அசிடிட்டியிலிருந்து விடுபட பலரும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதில் அசிடிட்டி குணமாக சிறந்த மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியமாக சீரகம் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
அசிடிட்டியால் அவதியா? டக்குனு சரியாக இந்த ஒரு விதையை மட்டும் எடுத்துக்கோங்க


How to consume fennel seeds for acidity: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளின் மீதான நாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. ஆனால் இதை அதிகம் உட்கொள்வது செரிமான பிரச்சனைகள், அசிடிட்டி, வாயு, வீக்கம் உட்பட பல்வேறு உடல் உபாயங்களை ஏற்படுத்தலாம். இந்த செரிமான பிரச்சனைகளைக் கையாள்வதற்கு கடைகளில் விற்கும் சில மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் வீட்டிலேயே எளிய மற்றும் இயற்கையான வைத்தியம் உள்ள போது வெளி மருந்துகளை ஏன் நாட வேண்டும். அமிலத்தன்மை, செரிமானம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு பெருஞ்சீரக விதைகளைச் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு சிறந்த மற்றும் இயற்கையான தீர்வாக அமைகிறது. இந்த மூலப்பொருளை நேரடியாக உட்கொள்ளலாம் அல்லது தேநீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது அமிலத்தன்மையிலிருந்து விரைவான நிவாரணத்தைத் தருகிறது. இதில் பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அசிடிட்டிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Fennel Seeds Benefits: ஆஹா! எடையை வேகமா குறைக்க இந்த ஒரு விதை போதுமா? இது தெரியாம போச்சே..

பெருஞ்சீரக விதைகள்

பெருஞ்சீரக விதைகளான சற்று அதிமதுரம் போன்ற சுவை மற்றும் வாசனையைக் கொண்ட விதைகளாகும். இது சமையலுக்கு சுவையைத் தரக்கூடியதாகும். எனவே தான் இது பல்வேறு உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது. பெருஞ்சீரக விதைகள் அதன் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சமையல் பயன்பாடுகளுக்காக நீண்ட காலமாகவே பாரம்பரிய மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பெருஞ்சீரக விதைகள் அசிடிட்டிக்கு எவ்வாறு உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அசிடிட்டியிலிருந்து விடுபட பெருஞ்சீரக விதைகள் எவ்வாறு உதவுகிறது?

இந்த விதைகள் பாரம்பரியமாக அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை போக்க பயன்படுத்தப்படுகிறது. ஆய்வு ஒன்றில், அமிலத்தன்மைக்கான ஒரு எளிய மற்றும் சிறந்த வீட்டு வைத்தியமாக பெருஞ்சீரகம் உதவுவதாகக் கூறப்படுகிறது.

கார்மினேடிவ் பண்புகள்

இந்த பண்புகள், உடலில் செரிமான அமைப்பிலிருந்து அதிகப்படியான வாயுவை வெளியேற்ற உதவக்கூடியதாகும். இது வயிற்று அமிலம் மீண்டும் உணவுக்குழாய்க்குள் பாய்வதைத் தடுக்கிறது. மேலும் இதனால் உணவுக்குழாய் சுழற்சியின் கீழ் வீக்கம் மற்றும் அழுத்தத்தைத் தணிக்கலாம்.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த

பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள சில கலவைகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது எரிச்சலைத் தணிக்கவும், அதிகப்படியான அமில உற்பத்தியால் ஏற்படும் வயிற்றுப் புறணியின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

காரமான பண்புகள்

இந்த விதைகளை உட்கொள்வது உடலில் காரத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது அதிகப்படியான வயிற்று அமிலத்தை நடுநிலையாக்கவும், அமிலத்தன்மை அறிகுறிகளை நீக்கவும் உதவுகிறது.

ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவுகள்

பெருஞ்சீரக விதைகளானது செரிமானப் பாதையின் தசைகளை தளர்த்தக்கூடிய கலவைகளைக் கொண்டுள்ளது. இது அமிலத்தன்மைக்கு பங்களிக்கும் சுருக்கங்கள் மற்றும் பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fennel Water: வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பது PCOD மற்றும் PCOS பிரச்சினைக்கு நல்லதா?

அசிடிட்டி நீங்க பெருஞ்சீரக விதைகளை எப்படி சாப்பிடலாம்?

பெருஞ்சீரக விதைகளைப் பல்வேறு வழிகளில் உணவில் சேர்க்கலாம். இதில் அமிலத்தன்மையிலிருந்து விடுபட பெருஞ்சீரக விதைகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

பெருஞ்சீரக விதைகளை மெல்லுதல்

இந்த விதைகளை நேரடியாக அப்படியே உட்கொள்ளலாம். அதாவது உணவுக்குப் பிறகு ஒரு சிறிய அளவிலான பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும். இவ்வாறு உட்கொள்வது செரிமானத்தைத் தூண்டுவதற்கும், அதிகப்படியான வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதற்கும் ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

பெருஞ்சீரகம் விதை பவுடர்

பெருஞ்சீரக விதைகளை நன்கு தூளாக அரைத்து பவுடர் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அரை டீஸ்பூன் அளவிலான பெருஞ்சீரக பொடியை ஒரு கிளாஸ் அளவிலான வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது உணவுக்குப் பின் ஏற்படும் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

பெருஞ்சீரக டீ

இது பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வதற்கான மற்றொரு வழியாகும். அதன் படி, ஒரு கப் அளவிலான வெந்நீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இந்த தேநீரை வடிகட்டி அருந்தலாம். இதில் சுவைக்காக சிறிது தேன் அல்லது எலுமிச்சை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

உணவில் சேர்க்கும் பெருஞ்சீரக விதைகள்

நம் அன்றாடம் செய்யும் பல்வேறு உணவு வகைகளில் பெருஞ்சீரக விதைகளில் சேர்ப்பது உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்வதுடன், அசிடிட்டியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Fennel Seeds Benefits: பெருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?!

Image Source: Freepik

Read Next

Eye fatigue remedies: சோர்வான கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

Disclaimer