Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Acidity Remedies: அசிடிட்டியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்க

Home Remedies for Acidity: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாகவே அமிலத்தன்மை பிரச்சனை அமைகிறது. பொதுவாக, அமிலத்தன்மை என்பது மார்பில் எரியும் உணர்வைக் குறிப்பதாகும். இது நெஞ்செரிச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றில் அதிகப்படியான அமிலம் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும் போது, அமிலத்தன்மை ஏற்படுகிறது. இது குடல் புறணியை எரிச்சலூட்டுவதுடன், சில சமயங்களில், உணவுக்குழாய் திசுக்களையும் பாதிக்கிறது.

அசிடிட்டிக்கான பொதுவான காரணங்களில் உணவைத் தவிர்ப்பது குறிப்பாக இரவு உணவைத் தவிப்பது, காரமான உணவுகளை அடிக்கடி உண்பது, அதிக மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை மற்றும் மது அருநுவது போன்றவை அடங்கும். எனினும், இந்த அசிடிட்டியைக் குணமாக்க சில எளிய வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். உணவு உண்ணாமல் இருப்பதால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனைக்கு பால், நெல்லிக்காய் போன்ற வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். அதே போல, காரமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் அசிடிட்டிக்கு மருத்துவரின் பரிந்துரையில் டானிக்குகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mosquito Bites Remedies: கொசுக்கடி அரிப்பை ஆற்றும் சூப்பரான வீட்டுவைத்தியங்கள் இதோ!

அசிடிட்டி குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

சீரக விதைகள்

உணவில் சுவையை அதிகரிக்க சீரக விதைகள் உதவுகிறது. எனினும், இது அசிடிட்டி பிரச்சனைக்கு உதவும் என்பதை பலரும் அறிவதில்லை. ஜீரா விதைகளில் இயற்கையான கார்மினேடிவ் மற்றும் செரிமான முகவர்களாக செயல்படும் கலவைகள் உள்ளது. எனவே இவை வாய்வு மற்றும் அஜீரணம் காரணமாக ஏற்படும் அசிடிட்டியைப் போக்க உதவுகிறது. மேலும் இது அசௌகரியம் மற்றும் வயிற்று வலியைக் குணமாக்க உதவுகிறது. அசிடிட்டியைக் குணமாக்க சீரகத்துடன் மற்ற சில பொருள்கள் கலந்து பயன்படுத்தலாம். இது தவிர, சீரகத்தைக் கொண்டு சீரக டீ தயார் செய்யலாம். அடிக்கடி அமிலத்தன்மையை சந்திப்பவர்கள், சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

மோர்

வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குவது மட்டுமல்லாமல், ஒரு சிறந்த குளிர்பானமாகவும் மோர் அமைகிறது. இந்த பானத்தை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும் போது, குடல் ஆரோக்கியத்திற்கான நல்ல புரோபயாடிக் பாக்டீரியாக்கள் கொண்டிருப்பதால், இவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், மோரில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இவை அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வாயு பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவுகிறது. அடிக்கடி அசிடிட்டி பிரச்சனையைச் சந்திப்பவர்கள், தினமும் உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் மோர் அருந்தலாம்.

ஓமம்

அஜீரணத்தால் ஏற்படும் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைக்கு ஓமம் ஒரு பொதுவான தீர்வாகும். வயிற்று வலி, வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் போன்றவை அஜீரணத்தின் பொதுவான அறிகுறிகளாகும். உணவைத் தவிர்ப்பது, உணவுகளுக்கு இடையில் ஏற்படும் நீண்ட இடைவெளி, அதிகமாக உட்கொள்வது உள்ளிட்டவற்றிற்கு ஓமம் சிறந்த தேர்வாகும். இதற்கு இதில் உள்ள தைமால் என்ற கலவையே காரணமாகும். இது இரைப்பை சாறுகளை சுரக்க உதவுவதுடன் அஜீரணம் மற்றும் வாயுவை எளிதாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Strain Remedies: தீராத கண்சோர்வால் அவதியா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

ஆம்லா

இது வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆனது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இதை பச்சையாகவோ, உலர்ந்த வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது அமிலத்தன்மையை நீக்குவதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலிலிருந்து நச்சுகளை அகற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தேங்காய் தண்ணீர்

கோடை நாளில் தேங்காய் தண்ணீரை அருந்துவது, தாகத்தைத் தணிப்பதுடன் நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. அது மட்டுமல்லாமல், இது அமிலத்தன்மையை போக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இது அசிடிட்டிக்கு சிறந்த தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தேங்காய்த் தண்ணீரைக் குடிப்பது வயிற்றை அமைதிப்படுத்தவும், அமிலத்தன்மையைப் போக்கவும் உதவுகிறது. இதற்கு இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்களே காரணமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் இனிமையான விளைவை ஏற்படுத்தி, அமிலத்தன்மையை அமைதிப்படுத்துகிறது.

இவ்வாறு அசிடிட்டி போன்ற உடல் நல பிரச்சனைகளை விலக்கி, உடல் ஆரோக்கியத்தைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் இந்த வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Clove Essential Oil: என்ன செய்தாலும் தலைவலி போகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

Eye Strain Remedies: தீராத கண்சோர்வால் அவதியா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content