Fri Sep 11, 2026 | 10:21 PM IST

கருப்பை தொற்றிலிருந்து விடுபட மருத்துவர் சொன்ன இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

What to do if there is infection in the uterus: பெண்களின் கருப்பையில் தொற்று ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும் சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் கருப்பைத் தொற்றுக்களிலிருந்து நிவாரணம் பெற முடியும். இதில் கருப்பையில் ஏற்படும் தொற்றுக்கு நிவாரணம் அளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

Home remedies for uterus infection: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டத்திலும் பல வகையான உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அவர்கள் வயதாகும்போது, இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கலாம். இது சில பெண்களின் கருவுறுதல் பலவீனமடையச் செய்கிறது. இன்னும் சிலர் PCOS உடன் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பல பெண்கள் கருப்பை தொடர்பான பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். இதில் கருப்பை தொடர்பான பிரச்சனைகளில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். கருப்பை சார்ந்த பிரச்சனைகளாக வீக்கம், தொற்று அல்லது கட்டி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். இதில் கருப்பையில் தொற்று ஏற்படுவது மிகவும் பொதுவானதாகும். கருப்பையில் தொற்று ஏற்படும்போது, பெண்களுக்கு அடிவயிற்றின் கீழ் வலி, சிறுநீர் கழிக்கும் போது சிரமம், மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் யோனி வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இந்த நிலை மிகவும் வேதனையாக இருக்கும். எனவே, கருப்பையில் தொற்றுக்கான அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், விரும்பினால், கருப்பை தொற்றைக் குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்களையும் கையாளலாம். அதன் படி, சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் கருப்பையில் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Vaginal Health: கருப்பை தொற்று ஏற்பட்டால் என்ன சாப்பிடணும்? டயட் டிப்ஸ் இதோ!

கருப்பை தொற்றிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்

மஞ்சள் தண்ணீர் குடிப்பது

கருப்பையில் தொற்று ஏற்பட்டால், மஞ்சள் கலந்த தண்ணீரை குடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் அளவிலான வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நன்மை பயக்கும்.

ஏனெனில், மஞ்சள் நீர் அருந்துவது கருப்பை தொற்று அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை மஞ்சள் நீரைக் குடிப்பதன் மூலம் நிறைய நிவாரணம் பெறலாம். மேலும், மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தொற்றை நீக்க உதவுகிறது.

ஷிலாஜித்தை உட்கொள்ளலாம்

கருப்பையில் தொற்று பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் ஷிலாஜித்தை உட்கொள்வது நன்மை பயக்கும். ஷிலாஜித் என்பது ஒரு ஆயுர்வேத மருந்தைக் குறிக்கிறது. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அமையக்கூடிய ஒரு சர்வரோக நிவாரணியாகும். கருப்பையில் தொற்று ஏற்படின், தூய ஷிலாஜித் மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஏனெனில் தொற்றுக்கு காரணமான பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு ஷிலாஜித் உதவுகிறது. இது சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் பிரச்சனையையும் நீக்குகிறது.

அஸ்பாரகஸ் பொடியை உட்கொள்வது

கருப்பை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அஸ்பாரகஸை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக, அஸ்பாரகஸ் என்பது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது சந்தையில் எளிதாகக் கிடைக்கக் கூடியதாகும். எனவே எடை குறைவாக இருப்பவர்களும், தொற்றுநோயிலிருந்து விடுபடவும் அஸ்பாரகஸ் பொடியை உட்கொள்ளலாம். எனினும், அஸ்பாரகஸை நீண்ட நேரம் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது உடல் எடையை அதிகரிக்கக் கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Ovaries: கருப்பைகள் ஆரோக்கியமாக இருக்க இதை சாப்பிடவும்..

ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது

கருப்பையில் ஏற்படும் தொற்றுகளைக் குணப்படுத்துவதற்கு உடல் ஆரோக்கியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு சீரான உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகும். இதற்கு தேங்காய் தண்ணீர், சாறு மற்றும் பழங்களை உட்கொள்ளலாம். மேலும், ஒருவர் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். ஆனால், இரவில் தண்ணீர் அல்லது பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

படிகாரம் தண்ணீரைப் பயன்படுத்துவது

கருப்பையில் தொற்று ஏற்படும் போது, சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும் என டாக்டர் ஷ்ரே சர்மா கூறுகிறார். கூடுதலாக, யோனி வெளியேற்றம் துர்நாற்றம் வீசலாம். இந்த சூழ்நிலையில், படிகாரத்தைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். இதற்கு ஒரு துண்டு படிகாரத்தை எடுத்துக் கொண்டு, அதை வாணலியில் நன்றாக வறுக்க வேண்டும். அதன் பிறகு, தண்ணீரில் படிகாரத்தைச் சேர்த்து இந்த நீரால் யோனியை சுத்தம் செய்ய வேண்டும். இது தொற்றுநோயை அகற்ற உதவுவதாகக் கூறப்படுகிறது.

கருப்பையில் தொற்றுக்கான அறிகுறிகளை உணர்ந்தால், அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Uterus Infection: கருப்பை தொற்று உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிடவும்

Image Source: Freepik

Read Next

நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதால் வயிறு சரியில்லையா.? இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content