How to reduce fever at home for adults: பருவகால மாற்றங்களினால் பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மழைக்காலம் சளி, இருமல், வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு உடல்நல சிக்கல்களைக் கொண்டு வரக்கூடிய காலமாகும். வானிலை மாற்றத்தால், காய்ச்சல் ஏற்படுவது பொதுவானதாகும். அதே சமயம், வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உடலின் ஆரம்ப அறிகுறிகளாக இவை உள்ளது. இதன் காரணமாகவே உடலில் வெப்பநிலை உயர்கிறது. உண்மையாக, இது மிகவும் சங்கடமான உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மேலும், சில சமயங்களில் மருத்துவரைச் சந்திக்கவோ அல்லது சரியான நேரத்தில் சரியான வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பெறவோ முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஒருவர் எப்போதும் வீட்டு வைத்தியங்களைக் கையாள்வர். எனினும், இது எப்போதும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்காது. ஆனால், சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் சரியான ஆலோசனைக்காக மருத்துவரை அணுகுவதும் அவசியமாகக் கருதப்படுகிறது. இதில், வீட்டிலேயே காய்ச்சலை உடனடியாகக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: காய்ச்சல் இப்படி இருக்கா? அலட்சியம் வேணாம்.. உடனே மருத்துவரிடம் போங்க!
வீட்டிலேயே காய்ச்சலை உடனடியாகக் குறைப்பதற்கான வழிகள்
நீரேற்றமாக இருப்பது
காய்ச்சலைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாக உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியும். ஏனெனில், தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, தொற்றுநோயை நீக்குகிறது.
அதே சமயம், ஸ் காய்ச்சல் காரணமாக உடல் வழக்கத்தை விட அதிக வெப்பத்துடன் காணப்படலாம். இவை உடலை வியர்வை மற்றும் குளிர்விக்கச் செய்கிறது. அதே சமயம், இது நீரிழப்புக்கு வழிவகுக்கலாம். எனவே இழந்த திரவத்தை மீண்டும் பெற போதுமான அளவு தண்ணீர் குடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
குளிர்ந்த கட்டுகளைப் பயன்படுத்துவது
காய்ச்சலைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள மற்றும் விரைவான வழிகளில் ஒன்றாக குளிர்ந்த கட்டுகளை பயன்படுத்துவது அடங்கும். அதாவது, நெற்றியிலும் கழுத்தின் பின்புறத்திலும் குளிர்ந்த, ஈரமான துணி வைப்பது காய்ச்சலை விரைவாகக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், அதிக வெப்பத்தை உருவாக்கும் உடல் பகுதிகளில் ஈரமான துணியை வைக்க வேண்டும். இவற்றில் பாதங்கள், நெற்றி, அக்குள், உள்ளங்கைகள் மற்றும் கழுத்து போன்றவை அடங்கும். இந்த முறையை 5 நிமிடங்கள் மட்டுமே பின்பற்றினாலே, காய்ச்சலைக் குறைக்க முடியும்.
வளிமண்டலத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பது
அறை வெப்பநிலையை சற்று குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உடலை உடனடியாகக் குளிர்விக்கலாம். எனவே குழந்தைக்கு காய்ச்சல் இருப்பின், சிறிது நேரம் ஏசியை ஆன் செய்து, குழந்தையை ஒரு லேசான விரிப்பு அல்லது போர்வையால் மூடி வைக்கலாம். இது அவர்கள் மிகவும் நன்றாக உணர உதவுவதுடன், அவர்கள் தூங்குவதற்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tropical diseases: முக்கிய வெப்பமண்டல நோய்களும், அதை தடுக்கும் முறைகளும்! மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ
ஓய்வு எடுப்பது
காய்ச்சல் வந்தால், எந்த வேலையையும் செய்யாமல் சிறிது நேரம் ஓய்வெடுப்பதை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த காலநிலையில் ஓய்வு மிகவும் முக்கியமாகும். பொதுவாக, காய்ச்சலின் போது ஒருவர் உடல் ஒரு வைரஸ் அல்லது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. இந்நிலையில், அதிக வேலைகளில் ஈடுபடுவது உடலிலிருந்து வெப்பத்தை உருவாக்குவதுடன், காய்ச்சலை அதிகப்படுத்துகிறது. எனவே உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.
லேசான ஆடைகளை அணிவது
உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு லேசான ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில், அதிகப்படியான ஆடைகள் உடலிலேயே வெப்பத்தைத் தடுத்து நிறுத்தக்கூடும். இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கூடுதலாக, கனமான போர்வையை ஒதுக்கி வைத்துவிட்டு, லேசான விரிப்பால் உடலை மூடிக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் நாம் நோய்வாய்ப்பட்டிருக்காவிட்டாலும் கூட, சூடான போர்வைகள் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதாக அமைகிறது.
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், மருத்துவரை அணுக முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். காய்ச்சல் அதன் பிறகும் அதிகம் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: கொசுக்கடியால் மலேரியா காய்ச்சல் வரும்னு பயமா.. கொசுக்களைத் தடுக்க உதவும் சூப்பரான ரெமிடிஸ் இதோ
Image Source: Freepik