வீக்கத்தைக் குறைக்க நீங்க தினமும் செய்ய வேண்டிய பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?

Daily habits that reduce inflammation naturally: பொதுவாக, வீக்கம் என்பது காயம், தொற்று அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு உடலின் இயற்கையான எதிர்வினையைக் குறிக்கிறது. இந்த வீக்கத்தைக் குறைப்பதற்கு அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் வீக்கத்தைக் குறைக்க பின்பற்ற வேண்டிய பழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வீக்கத்தைக் குறைக்க நீங்க தினமும் செய்ய வேண்டிய பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?


Simple everyday routines to help fight inflammation: வீக்கம் என்பது இன்று பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இது தொற்று, காயம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு உடலின் இயற்கையான எதிர்வினையைக் குறிக்கிறது. வெப்பம், வீக்கம், வலி மற்றும் சிவத்தல் போன்றவை வீக்கத்தால் ஏற்படும் சில அறிகுறிகள் ஆகும். பொதுவாக, குறுகிய கால வீக்கம் குணப்படுத்துவதற்கு நன்மை பயக்கும் என்றாலும் நீண்ட கால வீக்கம் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயமும் அதிகரிக்கலாம்.

நீடித்த வீக்கத்தின் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய், மூட்டுவலி மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல கடுமையான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகளும் வீக்கத்தை அதிகரிக்கலாம். அது மட்டுமல்லாமல், இவை நீண்ட கால சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த பழக்கங்களை அடையாளம் கண்டு மாற்றுவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும். இதில் வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான அன்றாட பழக்கங்களின் பட்டியலைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Inflammation Reduce Tips: உடலில் அழற்சி இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் அதனைத் தவிர்க்க உதவும் சில உணவுகள்

வீக்கத்தைக் குறைக்க உதவும் அன்றாட பழக்கவழக்கங்கள்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது

நீரிழப்பு காரணமாக உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. இது உடலில் நச்சுகளைத் தக்கவைப்பதன் மூலம் வீக்கத்திற்கு வழிவகுக்கலாம். மேலும், கழிவுகளை வெளியேற்றவும், ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை பராமரிக்கவும் நாள் முழுவதும் நன்கு நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். எனவே ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். மேலும் சுறுசுறுப்பாக இருந்தால் அல்லது வெப்பமான காலநிலையில் இருந்தால் இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சரியாக சாப்பிடுவது

பல்வேறு ஆரோக்கியமான உணவுகளில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. அதன் படி, பெர்ரி, மஞ்சள், பூண்டு, இஞ்சி, இலை கீரைகள், ஆலிவ் எண்ணெய், டார்க் சாக்லேட் மற்றும் நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது

வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தலாம். இவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே வாரத்திற்கு ஐந்து நாள்கள் மிதமானது முதல் தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

போதுமான தூக்கம் பெறுவது

பொதுவாக, தூக்கமின்மை காரணமாக உடலில் வீக்கம் அதிகரித்து காணப்படலாம். ஏனெனில், இவை அழற்சி அறிகுறிகளை எழுப்புவதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. எனவே நாள்தோறும் சீரான தூக்கத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு இரவும் 7-9 மணி நேரம் தரமான தூக்கத்தைக் கையாள வேண்டும். சிறந்த, தரமான தூக்கத்தின் மூலம் உடலை சரிசெய்யவும் புத்துயிர் பெறவும் அனுமதிக்கிறது. இதன் மூலம் உடலில் வீக்கத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Inflammation Reduce Drinks: இந்த சாறு குடிச்சா சீக்கிரம் மூட்டு வலி குணமாகிடும் 

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

அதிகப்படியான கார்டிசோல் அளவுகளின் காரணமாக வீக்கம் அதிகரித்து காணப்படலாம். இந்நிலையில், மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு யோகா, தியானம் அல்லது ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது போன்ற நுட்பங்களைக் கையாளலாம். இதன் மூலம் மன அழுத்த அளவை சமநிலைப்படுத்தவும் அழற்சி எதிர்வினைகளைக் குறைக்கவும் முடியும்.

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது & புகைபிடிப்பதைத் தவிர்ப்பது

அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இவை உடலில் வீக்கத்தை ஊக்குவிக்கக்கூடியதாகும். இந்த பழக்கங்களைக் குறைப்பது அல்லது நீக்குவது வீக்க அளவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்குகிறது.

இந்த எளிய வாழ்க்கை முறை தேர்வுகளின் மூலம் வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மேலும் இவை ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கக்கூடியதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Inflammation Reducing Tips: உடலில் வீக்கம் குறைய தினமும் நீங்க செய்ய வேண்டியவை

Image Source: Freepik

Read Next

Sore Throat Remedies: தீராத தொண்டைவலியால் அவதியா? உடனடி நிவாரம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!

Disclaimer