Tips To Reduce Inflammation: உடலில் ஏற்படும் வீக்கம் என்பது நோய் அல்லது காயத்தின் காரணமாக ஏற்படுவதாகும். ஆனால் இது நாள்பட்டதாக மாறும் போது, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, வீக்கத்தின் அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து, அதைக் குறைப்பதற்கான உணவுகளைத் தேர்வு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பாதுகாப்பு தரக்கூடியதாக அமையும்.
உடல் அழற்சியின் அறிகுறிகள்
உடலில் அழற்சி இருப்பதைக் கண்டறிய, சில அறிகுறிகள் தென்படும். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
மூட்டு வலி
விவரிக்க முடியாத மூட்டு வலி, விறைப்புத் தன்மை போன்றவை வீக்கம் இருப்பதைக் குறிக்கலாம். மேலும் கீல்வாதம் போன்ற நிலைமைகள் பெரும்பாலும் நாள்பட்ட அழற்சியை உள்ளடக்கியதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Kan Imai Veekam: கண் இமை வீக்கம் ஏற்பட இதெல்லாம் காரணமாம்!
தோல் பிரச்சனைகள்
தடிப்புத் தோல் அழற்சி, முகப்பரு, அரிக்கும் தோலழற்சி போன்றவை வீக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளாகும்.
செரிமானப் பிரச்சனைகள்
வீக்கம் இருக்கும் போது குடல் பாதிப்பு ஏற்பட்டு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
தொடர் சோர்வு
எல்லா நேரங்களிலும் சோர்வாக இருப்பது நாள்பட்ட அழற்சியின் அறிகுறிகளாகும். இது உடலில் இருந்து ஆற்றலை வெளியேற்றும்.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Health: கிட்னி பாதுகாப்புக்கான சில ஆரோக்கிய வழிமுறைகள்!
அடிக்கடி தொற்று ஏற்படுவது
வழக்கத்தை விட அதிகமாக, அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், நாள்பட்ட அழற்சியின் காரணமாக நோயெதிர்ப்பு அமைப்ப பாதிக்கப்படலாம்.
வீக்கத்தைக் குறைக்க அல்லது தவிர்க்க உதவும் உணவு முறைகள்
இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து பின் அதனைத் தவிர்க்க அல்லது குறைக்க சில உணவுகள் உள்ளன.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புக் கலவை குர்குமின் ஆகும். உணவுகளில் இதைப் பயன்படுத்துவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கலாம்.
முழு தானியங்கள்
ஆரோக்கியமான குடலுக்கு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி, குயினோவா, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..
ஆரோக்கியமான எண்ணெய்கள்
அவகேடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் வீக்கத்தைக் குறைக்க் கூடிய மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது.
புரோபயாடிக்குகள்
ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை மேம்படுத்த சார்க்ராட், யோகர்ட், கேஃபிர், மற்றும் இன்னும் பிற புரோபயாடிக் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை வீக்கத்தை எதிர்த்துப் போராட உள்ளது.
உணவுகளுக்கான தனிப்பட்ட தேவை மாறுபடலாம். எனவே, உடலுக்குச் சரியான மற்றும் சிறப்பாகச் செயல்படும் உணவுகளைத் தேர்வு செய்வது அவசியம். நாள்பட்ட வீக்கத்தை உணர்ந்தால், அதைத் திறம்பட நிர்வகிக்க மற்றும் நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார நிபுணரை அணுகி பயன்பெறலாம். மேலும், சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதன் மூலம் வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அமையும்.
இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
Image Source: Freepik