உடலில் ஏற்படும் மற்ற நோய்களை விட சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். சிறுநீரகம் சம்பந்தமான நோயால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்திலேயே சிறுநீரகத்தை பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். உடலில் முக்கிய உறுப்பாக இயங்கும் சிறுநீரக செயல்பாடு பாதிப்படைய ஏராளமான காரணங்கள் உள்ளன. எனவே, சிறுநீரக தொடர்பான நோய்களில் இருந்து விடுபட சில ஆரோக்கியமான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அவற்றைப் பங்கு இங்கு காண்போம்.
ஆரோக்கியமான சிறுநீரகத்தைப் பெற கடைபிடிக்க வேண்டியவை
சிறுநீரக பாதுகாப்பிற்கான தேவையில் உணவு கட்டுப்பாடு மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இன்னும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சிறுநீரகத்தைப் பெறலாம்.
முக்கிய கட்டுரைகள்
உடல் எடை கட்டுப்பாடு
அதிகப்படியான உடல் எடை இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றில் ஒன்றே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை ஆகும். உடல் பருமன் அதிகமாக இருக்கும் போது, அதிகப்படியான கொழுப்பு சேகரிக்கப்பட்டிருக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதன் விளைவாகவே, சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக்கிறது. குறிப்பாக, நீரிழிவு தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிதில் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். எனவே, உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இதற்கு உடற்பயிற்சி மேற்கொள்வது ஒரு தீர்வாகக் கருதப்படுகிறது.
வைட்டமின் சி சார்ந்த உணவுகள்
சிறுநீரப்பாதையில் அளவுக்கு அதிகமாக கால்சியம், யூரிக் அமிலம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் கற்கள் உண்டாகிறது. இதுவே சிறுநீரகக் கற்கள் எனப்படுகிறது. வைட்டமின் சி சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகக் கற்களை இயற்கையாக அகற்ற முடியும். சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தினந்தோறும் எலுமிச்சைச் சாறு அருந்துவதன் மூலம் சிறுநீர் வெளியேறுவதுடன், அதன் கற்களையும் அகற்றி விடும்.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது
நீரேற்றமாக வைத்தல்
போதுமான அளவு சிறுநீர் வெளியே வராமல் இருப்பதும் சிறுநீரகப் பிரச்சனைகளை உண்டாக்கும். இதற்கான காரணம் தண்ணீர் பற்றாக்குறையே ஆகும். அதிக அளவிலான தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. எனவே, அதிக அளவு தண்ணீர் குடிப்பதுடன் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கிட்னி பீன்ஸ்
சிறுநீரக பாதிப்பைக் குணப்படுத்துவதில் கிட்னி பீன்ஸ் உதவுகிறது. ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸில் புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும், கிட்னி பீன்ஸ் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கும் பலனளிக்கும். இந்த பீன்ஸில் நிறைந்துள்ள வைட்டமின் பி சத்துக்கள் சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், சிறுநீரக செயல்பாட்டை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?
வலி நிவாரணி மாத்திரைகள்
சிறுநீரக பாதிப்புக்கு மற்றொரு காரணமாக அதிக அளவிலான வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதே ஆகும். இவ்வாறு நாளுக்கு நாள் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகங்கள் அதிகமாக பாதிக்கப்படும். எனவே, வலி நிவாரணி மாத்திரைகளை அவ்வப்போது மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற நேரங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்பை தவிர்க்கலாம்.
இரத்த அழுத்தத்தை சரிபார்த்தல்
அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உடல் ஆரோக்கியம் அதிக அளவில் பாதிக்கப்படும். உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களுக்கு, இரத்தக்குழாயின் சுவரில் பாதிப்பு ஏற்படலாம். இதனால், சிறுநீரகத்தில் உள்ள இரத்தக்குழாயும் பாதிப்படைந்து இரத்தக்குழாய் குறுகி இறுக்கம் அடையும். எனவே, உயர் இரத்த அழுத்தத்தை சரியாக கண்காணிப்பதன் மூலம் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!
Image Source: Freepik