Tea With Biscuits Disadvantages: பெரும்பாலான மக்கள் தினமும் காலை எழுந்ததும் டீ குடிக்காமல் இருக்க மாட்டார்கள். அதிலும் இன்னும் சிலர் டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டால் தான் திருப்தி அடைவர். ஆனால், டீயுடன் பிஸ்கெட் தொட்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிடுவது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமையும்.
டீயுடன் பிஸ்கட்
இன்று அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு முறையாகவே டீயுடன் பிஸ்கட் கலந்து சாப்பிடுவது அமைகிறது. சிலருக்கு தினமும் டீ மற்றும் பிஸ்கட் இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் இவற்றால் ஏற்படும் விளைவுகளை யாரும் அறிவதில்லை. இது உடல் எடை அதிகரிப்பு, இரத்தச்சர்க்கரை அதிகரிப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
இரத்த சர்க்கரை அதிகரிக்கும் இனிப்பு கலந்த பிஸ்கட்டுக்குப் பதில் கோதுமை பிஸ்கட்டை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழும். ஆனால் கோதுமை பிஸ்கட்டிலும் அதிகளவு கலோரிகள் உள்ளன. கோதுமை பிஸ்கட்டுக்குப் பதில் கோதுமை ரஸ்க் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிஸ்கட்டை ஆரோக்கியமாக அல்லது ஆரோக்கியமற்றதாக மாற்றும் காரணிகள்
சர்க்கரை
பிஸ்கட்டை அதிகம் விரும்பி உண்ணுவதற்குக் காரணம் அதில் உள்ள சர்க்கரையே ஆகும். அதிக இனிப்பு பிஸ்கட்டுகள் எனில் அதிக சர்க்கரையைக் கலக்கின்றனர். உதாரணமாக சர்க்கரை கலந்த பிஸ்கட் விரைவில் செரிமானம் அடைவதை விட, அதிக கலோரிகள் நிரம்பியே காணப்படும். எனவே, சர்க்கரை கலந்த பிஸ்கட்டுகளை ஒரு முறை சாப்பிடலாம். தினமும் அதை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்துவதுடன், உடல் எடையையும் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..
பயன்படுத்தப்படும் மாவு
பிஸ்கட்டை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என பல உற்பத்தியாளர்கள் பிஸ்கட் தயாரிப்பிற்கு கோதுமை மாவைச் சுத்திகரிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு ஆரோக்கியமற்றதாகும். இந்த சுத்திகரிப்பு செயல்பாட்டில் கிடைக்கும் மாவு மைதா ஆகும். சுத்திகரிப்புக்குப் பின்னர் கோதுமை அதன் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகளை இழக்கிறது. இது செரிமானத்தை மெதுவாக்கி வாயு, வீக்கம், மலச்ச்சிக்கல், இரைப்பை மற்றும் குடல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் மைதா உடல் எடையை அதிகரிக்கிறது. எனவே பிஸ்கட் வாங்கும் போது சுத்திகரிக்கப்பட்ட மாவு இருக்கிறதா என்பதைச் சோதிக்கவும்.
டிரான்ஸ் கொழுப்பு
ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு அல்லது டிரான்ஸ் கொழுப்பு பிஸ்கட்டுகளின் அடுக்கு ஆயுளை அதிகரிக்க சேர்க்கப்படும் பொருளாகும். இதனால் இவை பல மாதங்களாக வாசனையுடன் உள்ளது. டிரான்ஸ் கொழுப்பு, அதிகரித்த எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நீரிழிவு அபாயம் அல்லது இதய நோய் பிரச்னையை ஏற்படுத்துகிறது. மேலும், பிஸ்கட்டுகளின் கலோரித் தன்மையைக் குறைக்கிறது. குறிப்பாக சர்க்கரை உள்ளடக்கம் அதிகம், நார்ச்சத்து இல்லாமல் இருப்பது போன்றவை குடல் ஆரோக்கியத்திற்கு மோசமானதாகவும், பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Health: கிட்னி பாதுகாப்புக்கான சில ஆரோக்கிய வழிமுறைகள்!
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் குளுக்கோஸ் பிஸ்கட்களின் தீமைகள்
குளுக்கோஸ் பிஸ்கட் ஆரோக்கியமானது ஆகும். இதனை டீயுடன் சேர்த்து சாப்பிடுவதை விரும்புகிறார்கள். எனினும், குழந்தைகளுக்கு பாலுடன் குளுக்கோஸ் பிஸ்கட் கொடுப்பது தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது.
செரிமான பிரச்சனைகள்
குளுக்கோஸ் பிஸ்கட்டில் நார்ச்சத்து இல்லாதது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிஸ்கட்களை குழந்தைகளால் எளிதில் ஜீரணிக்க முடியாததால் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
நரம்பு சுகாதார பிரச்சனைகள்
டிரான்ஸ் கொழுப்பு உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. இதனால், நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு, பார்வை பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது குழந்தைகளுக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
மோசமான ஊட்டச்சத்து
குழந்தைகளுக்கு சரியான வளர்ச்சி மற்றும் அதிக பட்ச ஊட்டச்சத்து மிகுந்தவையே தேவைப்படுகிறது. எனவே, குளுக்கோஸ் பிஸ்கட் இல்லாத ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட மாவு, டிரான்ஸ் கொழுப்ப, சர்க்கரை போன்றவை குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடியவை ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Main Reasons Of Headache: தலைவலி வருவதற்கு இதெல்லாம் காரணமாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!
Image Source: Freepik