Chia seeds side effects: தினமும் சியா விதை எடுத்துக் கொள்பவரா நீங்க? அப்ப கட்டாயம் இத பாருங்க

Side effects of consuming chia seeds everyday: பொதுவாக சியா விதைகள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகளாகும். ஆனால் தினமும் சியா விதைகளை உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். இதில் தினமும் சியா விதை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Chia seeds side effects: தினமும் சியா விதை எடுத்துக் கொள்பவரா நீங்க? அப்ப கட்டாயம் இத பாருங்க


What happens when you eat chia seeds everyday: உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள், பானங்கள், மூலிகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு அன்றாட உணவில் சேர்க்கப்படும் சில விதைகள் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் சியா விதைகளும் அடங்கும். சிறிய விதையான சியா விதைகள் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும்.

சியா விதைகளில் மிகப்பெரிய சக்தியாக அதன் நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இது மூளை செயல்பாடு, வீக்கம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. பெரும்பாலானோர் சியா விதைகளைத் தண்ணீரில் கலந்து குடிப்பது, தயிர் அல்லது மற்ற சில பழ ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது குடலை வலுப்படுத்தவும், எடையிழப்பையும் ஆதரிக்கிறது. ஆனால், தினமும் சியா விதைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதை யோசித்ததுண்டா?

இந்த பதிவும் உதவலாம்: Chia Seed Water Side Effects: தினமும் சியா விதை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

தினமும் சியா விதைகள் சாப்பிடலாமா?

சியா விதைகள் ஊறவைக்கும் போது, அது திரவத்தை உறிஞ்சி ஜெலட்டின் நிலைத்தன்மையை அடைகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால், அன்றாட உணவில் தினமும் சியா விதைகளைச் சேர்ப்பது பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். சியா விதைகளின் நன்மைகள் தருவதாக இருப்பினும், அதன் பக்கவிளைவுகளைத் தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியமாகும்.

தினமும் சியா விதைகளை சாப்பிடுவதால் ஏற்டும் விளைவுகள்

ஒவ்வாமை அபாயம்

சியா விதைகளுக்கு சிலர் ஒவ்வாமை அபாயத்தைக் கொண்டிருப்பர். எனவே சியா விதை ஒவ்வாமை கொண்டிருப்பவர்கள் இதை உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும். மேலும், அரிப்பு, மூச்சுத்திணறல் போன்ற கடுமையான ஒவ்வாமை கொண்டிருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இது அரிதானதாக இருப்பினும், சியா விதைகளுக்கு மயக்கம், முக வீக்கம், அரிக்கும் தோலழற்சி போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது சியா விதை ஒவ்வாமை தொடர்புடையதாக இருக்கலாம். எனவே சியா விதை ஒவ்வாமை இருப்பின் அதை எடுத்துக் கொள்ளும் முன் சுகாதார நிபுணரை அணுகலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்

சியா விதைகளின் அதிகப்படியான உட்கொள்ளல் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். இந்த விதைகளில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) போன்றவை உள்ளது. ஆனால் அதிகளவு உட்கொள்வதால், இந்த அமிலங்களில் ஏற்படும் மாற்றம் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் ALA உட்கொள்ளல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு இடையிலான சாத்தியமான கூறுகளைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஊற வைத்த சியா விதைகளை தினமும் சாப்பிடலாமா.? அப்படி என்ன இருக்கு இதுல.?

மூச்சுத்திணறல் ஆபத்து

பெரும்பாலான மக்களுக்கு சியா விதைகள் பாதுகாப்பானவையாக இருப்பினும், இது மூச்சுத் திணறல் அதிகரிக்கும் அபாயத்தை உண்டாக்கலாம். எனவே இதை கவனமாக உட்கொள்வது முக்கியமாகும். குறிப்பாக, விழுங்குவதில் சிரமம் கொண்டிருப்பவர்கள் இதை உட்கொள்ளும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உலர்ந்த சியா விதைகளைத் தண்ணீரில் ஊறவைக்கும் போது, திரவத்தை உறிஞ்சி அதன் எடையை அதிகரித்துக் கொள்கிறது. இதனால் அதிக ஆபத்து ஏற்படலாம். இதில் சியா விதைகள் எளிதில் வீங்கி தொண்டையில் அடைக்கப்பட்டு மூச்சுத்திணறல் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு.

வீக்கம் மற்றும் வாயு பிரச்சனை

சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்த விதைகளில் ஒன்றாகும். இந்த நார்ச்சத்துக்கள் சீரான தன்மையை வழங்குகிறது. மேலும், இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஆதரிக்கிறது. எனினும், இதை அதிகளவு எடுத்துக் கொள்வதால், இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

மருந்துகளுடன் தொடர்பு

சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் சில கலவைகள் நீரிழிவு மருந்துகள், இரத்த அழுத்த மருந்துகள், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாக மாறலாம். இது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதன் தொடர்புகளைக் குறைக்க சியா விதைகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை தனித்தனியாக உட்கொள்ளலாம்.

இது போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் சியா விதைகளை எடுத்துக் கொள்ளும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Chia seeds drink: சியா விதைகளுடன் இந்த ஒன்ன மட்டும் சேர்த்து குடிச்சா தொப்பைக் கொழுப்பு இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும்

Image Source: Freepik

Read Next

Kidney Health: சிறுநீரகங்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க 8 காலை பழக்கங்கள்!

Disclaimer