Side effects of eating too much pumpkin seeds: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இந்த பட்டியிலில் விதைகள் இல்லாமல் முழுமையடையாது. விதைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. இதில் பூசணி விதைகளும் அடங்கும். பூசணி விதைகள் இரும்பு, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கலைத் தடுக்கவும் காயம் குணமடையவும் உதவுகிறது.
ஆனால், இதை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கலாம். இவற்றை அதிகம் சாப்பிடுவதால், செரிமான பிரச்சினைகள் மற்றும் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, ஹைபோடென்ஷன் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், இந்த விதைகளை அன்றாட உணவின் ஒரு பகுதியாகச் சேர்ப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். இதில் பூசணி விதைகளை அதிகம் உட்கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் பூசணி விதை சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? டாக்டர் சொல்வது என்ன
பூசணி விதைகளின் நன்மைகள்
பூசணிக்காயின் உள்ளே காணப்படும் உண்ணக்கூடிய விதைகளே பூசணி விதைகள் ஆகும். இவை பொதுவாக தட்டையான, ஓவல் வடிவைக் கொண்டதாகும். மேலும் இது சற்று நட்ஸ் சுவை கொண்டதாகும்.
- பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் காயம் குணப்படுத்துதலை ஊக்குவிக்க உதவுகிறது.
- இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு அவசியமானவையாகும்.
- இது நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக இருப்பதால், இவை செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
அதிகளவு பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
ஒவ்வாமை
பூசணி விதைகளுக்கு பலருக்கு ஒவ்வாமை இருக்கலாம். இதனால், அவர்களுக்கு இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தலைவலி போன்ற சில ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டலாம். இது சருமத்தில் அரிக்கும் தோலழற்சி, படை நோய் அல்லது பிற வகையான எதிர்வினைகளைப் பெறலாம். எனவே இதை உட்கொள்வதற்கு கவனமாக இருப்பது முக்கியமாகும்.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
ஒருவர் ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் கொண்டிருப்பின், பூசணி விதைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை இயற்கையில் ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே இதை சாப்பிட விரும்பினால், இதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரு நிபுணரை அணுக வேண்டும். மேலும் எந்தவொரு உடல்நல சிக்கல்களையும் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட அளவைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எடை அதிகரிப்பு
எடை அதிகரிப்பைக் கொண்டவர்கள் பூசணி விதைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் அதிக கலோரிகள் உள்ளன. மேலும், இதை அதிகம் உட்கொள்வது கூடுதல் கிலோ எடையைக் கூட்டலாம். குறிப்பாக, டயட்டில் உள்ளவர்கள் பூசணி விதையை தேவையான அளவை விட அதிகமாக சாப்பிட வேண்டாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds: பூசணி விதைகளை இப்படி சாப்பிட்டால் பலசாலி, இப்படி சாப்பிட்டால் ஏமாலி? நீங்க யாரு?
செரிமான பிரச்சனைகள்
பூசணி விதைகளை அதிகளவு உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தலாம். இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், இவை வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தக்கூடும். இதில் உள்ள கொழுப்பு எண்ணெய்கள், அவை ஏற்றுக்கொள்ளத்தக்க அளவை விட அதிகமாக உட்கொள்ளும்போது தசைப்பிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. எனவே விதைகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது
பூசணி விதைகளில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். கூடுதலாக, இதன் சிறிய அளவு கூட மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த விதைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு மீறி அதிகமாக பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் 5 முக்கிய பக்க விளைவுகள்!
Image Source: Freepik