வெறும் வயிற்றில் பூசணி விதை சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? டாக்டர் சொல்வது என்ன

Can we eat pumpkin seeds in empty stomach: அன்றாட உணவில் பூசணி விதைகளை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். குறிப்பாக, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடுவது எந்த அளவுக்கு நன்மை தரும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வெறும் வயிற்றில் பூசணி விதை சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? டாக்டர் சொல்வது என்ன

Benefits of eating pumpkin seeds on an empty stomach: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், விதைகள், நட்ஸ் போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் அன்றாட உணவில் நட்ஸ் மற்றும் விதைகளைச் சேர்ப்பது முக்கியமாகும். பெரும்பாலான மக்கள் காலையில் வெறும் வயிற்றில் பாதாம், திராட்சை அல்லது வால்நட்ஸ் போன்றவற்றை உட்கொள்கின்றனர். இந்த வரிசையில் உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகளும் உதவுகின்றன. இதில் பூசணி விதைகளும் அடங்கும்.

உண்மையில், பூசணி விதைகளில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் எப்போதும் ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம். இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. மேலும் இதை உட்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும், இது எலும்புகளை வலுவடைய உதவுகிறது. இதில் காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆரோக்கிய டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் உணவியல் நிபுணர் டாக்டர் சுகிதா முத்ரேஜா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds: விதை ஒன்று பயன் நூறு… யாரெல்லாம் பூசணி விதை சாப்பிடணும் தெரியுமா?

பூசணி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

  • புரதம்: 8.4 கிராம்
  • நார்ச்சத்து: 1.4 கிராம்
  • கால்சியம்: 10.4 மி.கி.
  • இரும்புச்சத்து: 2.3 மி.கி.
  • கார்போஹைட்ரேட்டுகள்: 5.2 கிராம்
  • துத்தநாகம்: 1.8 மி.கி.
  • பொட்டாசியம்: 55.3 மி.கி.
  • மெக்னீசியம்: 140 மி.கி.
  • பாஸ்பரஸ்: 322 மி.கி.
  • மாங்கனீசு: 1.2 மி.கி.
  • கொழுப்பு: 11.2 கிராம்

வெறும் வயிற்றில் பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த

காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என மருத்துவர் சுகிதா முத்ரேஜா கூறுகிறார். உண்மையில் பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. கூடுதலாக பூசணி விதைகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. பூசணி விதைகளை தினமும் காலையில் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க

பூசணி விதைகள் இரும்புச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். பொதுவாக, இது உடலுக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில், இது உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பின் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்பட வாய்ப்புள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டின் காரனமாக இரத்த சோகை ஏற்படலாம். குறிப்பாக, பெண்களில் இது அதிகம் ஏற்படலாம். இந்நிலையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் போதுமான இரும்புச்சத்து பெறலாம். இதன் மூலம் இரத்த சோகையின் அறிகுறிகளைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: இத்தூண்டு விதையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? இது தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க

வீக்கத்தைக் குறைப்பதற்கு

பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு நாள்பட்ட நோய், நீரிழிவு நோய் அல்லது தைராய்டு போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே உடலில் வீக்கம் இருப்பின், காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை உட்கொள்ளத் தொடங்க வேண்டும். மேலும், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட

உடல் ஆரோக்கியத்திற்கு ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். இதற்கு வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடலாம். ஏனெனில், பூசணி விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக, உடல் மற்றும் சருமத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மிகவும் அவசியமாகும்.

செரிமான ஆரோக்கியத்திற்கு

பூசணி விதைகளில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். இந்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை உட்கொள்வது உடல் நார்ச்சத்தை எளிதில் உறிஞ்சிவிடுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், இது செரிமான சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் பூசணி விதைகளை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது.

இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவற்றைப் பெறுவதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை உட்கொள்ளலாம். வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் உடல் அதன் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்ச அனுமதிக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: எக்கச்சக்க நன்மைகளை அள்ளித் தரும் பூசணி விதை! எப்படி எடுத்துக்கொள்வது?

Image Source: Freepik

Read Next

இப்போ தான் கரும்பு ஜூஸ் குடிச்சீங்களா.? உடனே இதை எல்லாம் சாப்பிடாதீர்கள்..

Disclaimer