Can we eat carrot in empty stomach: தினமும் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய சில உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக அமைகின்றன. அவ்வாறு வெறும் வயிற்றில் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் அதன் சாறுகள் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளைப் பொறுத்த வரை இயற்கையாகவே நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன.
பொதுவாக காய்கறிகளில் நாம் பெரும்பாலும் வேக வைத்தே சாப்பிடுவோம். ஆனால், சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உடலுக்குப் பல அதிசய நன்மைகளை அளிக்கிறது. அவ்வாறு நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் காய்கறிகளில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்டை பச்சையாகவோ, வேகவைத்ததாகவோ, சமைத்ததாகவோ, வறுத்ததாகவோ அல்லது சூப்கள் மற்றும் குழம்புகளின் ஒரு அங்கமாகவோ எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளில் உள்ள வைட்டமின் உள்ளடக்கத்தை வேகவைக்கும்போது குறைக்கலாம் அல்லது அகற்றப்படலாம்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் குறிப்பிட்டபடி, கேரட்டைத் தினமும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு கேரட் போதும்.! எவ்வளவு நல்லது தெரியுமா.?
வெறும் வயிற்றில் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வைட்டமின் ஏ நிறைந்த
கேரட் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் கூறியதாவது ஒரு பரிமாறல், தினசரி ஊட்டச்சத்து மதிப்பில் 184% ஐ வழங்குகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், 4 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 900 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ பரிந்துரைக்கப்படுகிறது. FDA பரிந்துரையை பூர்த்தி செய்ய போதுமான வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் ஒரு முழுமையான பச்சை கேரட்டில் உள்ளது.
அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை நீக்குவதற்கு
கேரட்டில் சிறப்பு ஜீரணிக்க முடியாத நார்ச்சத்துக்கள் இருப்பதே காரணமாகும். இவை உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை நச்சு நீக்க உதவுகிறது. மேலும், இவை கல்லீரலை மிகவும் திறமையாக வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவும் வகையில், குடலில் இருந்து ஈஸ்ட்ரோஜன்களை மீண்டும் உறிஞ்சுவதைத் தடுக்க பச்சையான கேரட் உதவுவதாகக் கூறப்படுகிறது.
எண்டோடாக்சின்களை நச்சு நீக்குவதற்கு
கேரட் ஆனது பாக்டீரியா, ஈஸ்ட்ரோஜன் மற்றும் எண்டோடாக்சின்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளக்கூடிய தனித்துவமான இழைகளைக் கொண்ட வேர் காய்கறிகள் ஆகும். இந்நிலையில், சில நாள்களுக்கு ஒரு பச்சை கேரட்டை சாப்பிட்ட பிறகு, அதிக கார்டிசோல், அதிக எண்டோடாக்சின்கள், மற்றும் ஈஸ்ட்ரோஜனில் இருந்து சமநிலையை மாற்றக்கூடும். எனவே இவை உடலிலிருந்து எண்டோடாக்சின்களை நச்சு நீக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்த
தினமும் பச்சையாக கேரட்டை சாப்பிடும்போது, அதில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுடன் பிணைக்கப்பட்டு உடலில் இருந்து அதை வெளியேற்ற வழிவகுக்கிறது. இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் காரணமாக முகப்பரு, PMS, மனநிலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு ஹார்மோன் இடையூறுகள் ஏற்படலாம். பச்சையாக கேரட்டை உட்கொள்வது குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. மேலும், குடல் ரியா பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல செரிமானம் முதல் சரும பராமரிப்பு வரை.. கேரட்டில் இஞ்சி சேர்த்து குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?
தைராய்டை சமநிலைப்படுத்த
ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை உள்ளவர்கள் கேரட் ஒரு சிறந்த மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இவை தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கக்கூடிய வைட்டமின் ஏ-ன் சிறந்த மூலமாக அமைகிறது. எனவே பச்சையாக கேரட் சாப்பிடுவ்வது தைராய்டை சமநிலைப்படுத்த உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க
கேரட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் கேரட்டை உட்கொள்வது நாள் முழுவதும் தொற்று நோய் தாக்குதலை தடுக்கும் சக்தியை உடலுக்குத் தருகிறது.
தெளிவான சருமத்திற்கு
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. எனவே பச்சையான கேரட்டை சாப்பிடுவது வீக்கத்தைக் குறைத்து செல் புதுப்பித்தலை ஊக்குவிக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது சருமத்தின் கறைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Carrot Health Benefits: எடை இழப்பு முதல்.. சரும ஆரோக்கியம் வரை.. கேரட் சாப்பிடுவதன் நன்மைகள் இங்கே..
Image Source: Freepik