Carrot Juice vs Raw Carrots: கேரட் அல்லது கேரட் ஜூஸ்; ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

  • SHARE
  • FOLLOW
Carrot Juice vs Raw Carrots: கேரட் அல்லது கேரட் ஜூஸ்; ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

கேரட் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். பலர் கேரட் மற்றும் கேரட் ஜூஸைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் ஆரோக்கியத்திற்கு கேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதா அல்லது கேரட் ஜூஸாக சாப்பிடுவது நல்லதா என்ற சந்தேகம் எழக்கூடும். இதில் எது சிறந்தது, எந்த வகையில் எடுத்துக் கொள்வது உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் என அறிந்து கொள்ளுங்கள்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கேரட் தினமும் சாப்பிட சிறந்த காய்கறிகளில் ஒன்றாகும். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு மிகவும் அவசியமானவை. கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது தவிர, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி8, வைட்டமின் கே, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளன.

கேரட்டை பச்சையாக சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது, பச்சை கேரட்டில் உள்ள நார்ச்சத்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை பிணைக்கிறது. உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் முகப்பரு, பிஎம்எஸ், மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு ஹார்மோன் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஈஸ்ட்ரோஜனைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

சிலருக்கு இளம் வயதிலேயே முகச் சுருக்கம் ஏற்படும். இதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணம்.. கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.

கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. கேரட் உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

கேரட் பொட்டாசியம் நிறைந்த காய்கறி. எனவே, கேரட் நமது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய முக்கியமான காய்கறியாகவும் கேரட் உள்ளது.

கேரட் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்:

கேரட் ஜூஸில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் உள்ள செல் சேதத்தைத் தடுக்கவும், தொற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ப

ச்சை கேரட்டை விட கேரட் ஜூஸில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. ஆனால் கேரட் ஜூஸ் அதிகமாக குடிப்பது கரோட்டினீமியா என்ற நிலையை ஏற்படுத்தும். அதாவது இரத்தத்தில் பீட்டா கரோட்டின் அளவு அதிகரிப்பதால் தோல் மஞ்சள் நிறமாக மாறும்.

கேரட் சாற்றை குடிப்பதால் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவது மட்டுமின்றி கண் ஆரோக்கியமும் மேம்படும். முக்கியமாக கண்புரை, ரிக்கெட்ஸ் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

இதயத்தின் ஆரோக்கியத்திற்கு கேரட் ஜூஸ் மிகவும் நல்லது. தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் பிபி கட்டுப்படும். இது இதயத்திற்கும் மிகவும் நல்லது.

Image Source: Freepik

Read Next

இனி ஈஸியான முறையில் கடலை மிட்டாய் செய்யலாம்..

Disclaimer

குறிச்சொற்கள்