Benefits of eating one clove of garlic daily: நம் அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில உணவுப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தருவதாக அமைகிறது. அந்த வகையில் அதன் சக்திவாய்ந்த மருத்துவ மற்றும் சமையல் பண்புகளுக்காக நன்கு அறியப்படும் ஒன்றாகும். இது நமது வழக்கமான உணவுகளின் சுவையை அதிகரிக்க உதவுவதுடன், சில குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. பூண்டில் வைட்டமின்கள் பி6, சி, சல்பர், அல்லிசின் மற்றும் செலினியம் போன்ற பல்வேறு சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையே பரந்த அளவிலான மருத்துவ குணங்களுக்கு பங்களிக்கிறது. அதன் படி, தினமும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளைத் தருகிறது.
தினமும் வெறும் வயிற்றில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
பூண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு மட்டும் உகந்தது அல்ல. இது செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியதாகும். இது ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு, நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். இது சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு வழிவகுக்கிறது. எனவே, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வது செரிமான அமைப்பைத் தூண்டவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Garlic to Lower Cholesterol : கெட்ட கொழுப்பு கரையணுமா?… பூண்டை இப்படி பயன்படுத்திப் பாருங்க!
கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கு
பூண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளைக் கொண்டதாகும். இதனை வழக்கமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. பூண்டில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கவும், சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த
பொதுவாக, உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்த இரத்த அழுத்த அளவைச் சாதகமாக பாதிக்கும் வகையில் பூண்டு அமைகிறது. ஏனெனில், பூண்டில் உள்ள கந்தக சேர்மங்கள் இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே, மருந்துகளை மட்டும் நம்பாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு, உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம். எனவே வெறும் வயிற்றில் பூண்டு உட்கொள்வது இரத்த அழுத்த அளவீடுகளில் படிப்படியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
தினமும் பூண்டு சாப்பிடுவதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதாகும். பூண்டில் அல்லிசின் போன்ற கலவைகள் உள்ளது. இது உடலில் நோய்த்தொற்றுக்கள எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே உணவில் பூண்டை தவறாமல் சேர்ப்பது சளி பிடிக்கும் அல்லது நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. குறிப்பாக, இது காய்ச்சல் பருவத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் படி, தினமும் காலையில் பூண்டு உட்கொள்வதை வழக்கமாக்குவதன் மூலம் பொதுவான நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் மதிய உணவுக்கு முன் 3 பூண்டு பற்களை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
வீக்கத்தைக் குறைப்பதற்கு
சில பொதுவான காரணங்களால் நாள்பட்ட வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நாள்பட்ட வீக்கங்களின் காரணமாக கீல்வாதம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க உடல் முழுவதும் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வேண்டும். இந்நிலையில் தினசரி உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைப்பதுடன், அழற்சி நிலைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். மேலும், இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே, தினமும் காலையில் பூண்டை உட்கொள்வது உடலில் அழற்சி எதிர்ப்பு நன்மைகளை மேம்படுத்தி, நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வதற்கான சரியான வழி
தினமும் காலையில், ஒரு பல் பச்சை பூண்டை நசுக்கி அல்லது நறுக்கி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் விழுங்கலாம். பூண்டை நறுக்கி அல்லது நசுக்கும் போது அதன் சக்திவாய்ந்த மருத்துவ விளைவுகளுக்கு காரணமான கலவையான அல்லிசினை செயல்படுத்துகிறது. மேலும், இதன் சுவை மிகவும் வலுவாக இருப்பதால், சுவையை மேம்படுத்த தேன் அல்லது எலுமிச்சை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பலவிதமான நன்மைகளைத் தருகிறது. எனினும்,வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க
Image Source: Freepik