தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க

  • SHARE
  • FOLLOW
தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க

இதற்கு ஒரு சிறந்த தேர்வாக, இரவு நேரத்தில் பூண்டு உட்கொள்ளலாம். தினமும் இரவில் பச்சைப் பூண்டு உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் பச்சை பூண்டை இரவில் குறிப்பாக 21 நாள்களுக்கு முன் மென்று சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் இரவில் 1 பல் பூண்டு உட்கொள்வதால் கிடைக்கும் ஆயுர்வேத நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Raisins For Cough: தொடர் இருமலால் அவதியா? கருப்பு உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க

தினமும் இரவு 1 பல் பூண்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடை குறைய

பூண்டு ஒரு இயற்கை நச்சுப் பொருளாகச் செயல்படுகிறது. இது உடலிலிருந்து தேவையற்ற பொருட்கள் விடுபடுவதை உறுதி செய்கிறது. மேலும், பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்துவதுடன், உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருள்களை அகற்றுவதற்கும் உதவுகிறது. எனவே, தினமும் இரவில் ஒரு பல் பூண்டு உட்கொள்வது உடலிலிருந்து அதிகப்படியான கொழுப்பை எரிப்பதுடன், தேவையற்ற உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

பூண்டு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுப் பொருளாகும். இது உடல் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை சமாளிக்கவும் உதவுகிறது. எனவே படுக்கைக்கு முன்னதாக ஒரு பல் பூண்டை உட்கொள்வது சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது. மேலும் உடல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் முதுமை அறிகுறிகளை மெதுவாக்குகிறது.இது நாள்பட்ட நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

வழக்கமான பூண்டு நுகர்வு ஆனது எளிமையான ஒன்றாகும். இது சிறந்த இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது. பூண்டில் உள்ள பண்புகள் இயற்கையாகவே இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் குறைப்பதாகக் கூறப்படுகிறது. சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு இரவுப் பழக்கத்தில் ஒரு பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

பூண்டில் அல்லிசின் போன்ற அதிக அளவு கந்தக சேர்மங்கள் நிறைந்துள்ளது. இந்த சேர்மங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே, படுக்கைக்கு முன் பூண்டு உட்கொள்வது நோயெதிர்ப்பு அமைப்புக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது. தூக்கத்தின் போது உடல் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தவும், நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படவும் இவை உதவுகின்றன.

செரிமான பிரச்சனைக்கு

உணவில் பூண்டு சேர்ப்பது சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், உடலில் கொழுப்பு செல்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள மரபணுக்களைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் பூண்டு உடலில் தெர்மோஜெனீசிஸை அதிகரித்து, அதிக கொழுப்பு செல்களை எரிக்கவும் உதவுகிறது. மேலும் இது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே படுக்கைக்கு முன்னதாக ஒரு பல் பூண்டு சேர்த்துக் கொள்வது உடல் வைட்டமின் பி6, சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு ஓன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த

பூண்டில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இவை தூக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய டிரிப்டோபான் செரோடோனின் உற்பத்திக்குக் காரணமாகிறது. இது மனதிற்கு அமைதியைத் தூண்டவும், தூக்கத்தின் சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. படுக்கைக்கு முன்னதாக பூண்டு சேர்த்துக் கொள்வது விரைவில் தூங்குவதற்கும், இரவு முழுவதும் நல்ல தூக்கத்திற்கும் அவசியமாகிறது.

ஆயுர்வேத முறைப்படி, தினமும் இரவில் 1 பல் பூண்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!

Image Source: Freepik

Read Next

Black Raisins For Cough: தொடர் இருமலால் அவதியா? கருப்பு உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க

Disclaimer

குறிச்சொற்கள்