இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!


Why Should You Avoid Excessive Spices During Summer: பருவகால மாற்றத்திற்கு ஏற்ப உணவுமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவே உடல் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாக்க முடியும். அந்த வகையில் கோடைகாலத்தில் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், காரமான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, அதிக காரமான உணவுகளை உட்கொண்டால், உணவில் குணப்படுத்தும் மற்றும் குளிர்ச்சியான பொருள்கள் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கோடைக்காலத்தில் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைச் சேர்ப்பது வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் படி, பெருஞ்சீரகம், புதினா மற்றும் கொத்தமல்லி போன்ற குளிரூட்டும் மசாலாப் பொருள்களை உணவில் சேர்ப்பது உடல் உறுப்புகள், வாத மற்றும் பித்த தோஷங்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இவை செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதாக அமைகிறது.

கோடைக்காலத்தில் ஏன் அதிகமாக கார உணவுகளை சாப்பிடக் கூடாது?

எந்த காலநிலையாக இருந்தாலும் காரமான உணவை எடுத்துக் கொள்ள பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், கோடைக்கால உணவுகளை குறைந்த எண்ணெய் மற்றும் குறைந்த மசாலா பொருள்களுடன் தயாரிப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான மசாலாப் பொருள்களை கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். இது குறித்து, ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.

மசாலா உணவுகளும் உடலின் தோஷங்களுக்குமான இணைப்பு

ஆயுர்வேத முறைப்படி, உடலின் அமைப்பானது வாத, பித்த மற்றும் கபா போன்ற மூன்று தோஷங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் ஒன்று பித்த தோஷம் ஆகும். இது உடலில் உள்ள நெருப்பு மற்றும் வெப்பத்தைக் குறிக்கிறது. இந்த கோடைக்காலத்தில் அதிகப்படியான மசாலாப் பொருள்களை உட்கொள்வது உடலின் வெப்ப விளைவை ஏற்படுத்தும் மற்றும் பித்த தோஷத்தை மோசமாக்கலாம். மேலும் இது வீக்கம், அமிலத்தன்மை மற்றும் சரும எரிச்சல் போன்ற ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். கோடைக்காலத்தில் வெளிப்புற வெப்பத்தால் பிட்டா அளவுகள் இயற்கையாகவே அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அதிகப்படியான மசாலாப் பொருள்கள் உட்கொள்வது பித்த தோஷத்தில் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கலாம்.

உடல் சக்திகளின் ஏற்றத்தாழ்வு

ஆயுர்வேத முறைப்படி, மனித உடலானது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஈதர் போன்ற ஐந்து அடிப்படை சக்திகளால் ஆனது எனக் கூறப்படுகிறது.எனவே காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வது இந்த தனிம சக்திகளின் சமநிலையை சீர்குலைக்கலாம். குறிப்பாக, நெருப்பு உறுப்பான பிட்டா தொடர்பான ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கலாம்.

செரிமான பிரச்சனை

ஆயுர்வேத முறைப்படி, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஜதராகினி என்றழைக்கப்படும் வலுவான செரிமான நெருப்பை பராமரிப்பது அவசியமானதாகும். கோடைக்காலத்தில் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வது உடல் வெப்பத்தை அதிகரித்து செரிமானத்தை மோசமாக்கி வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் அமிலத்தன்மை போன்றவை ஏற்படலாம். இது உடலுக்குக் கடினமானதாக இருக்கும். குறிப்பாக, வெப்பமான காலநிலையின் போது இயற்கையாகவே குளிர்ச்சியைத் தரும் உணவுகளை உட்கொள்வது செரிமான திறனை சமரசம் செய்கிறது.

உடல் வெப்பம் அதிகரிப்பு

இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் போன்ற மசாலாப் பொருள்கள் உடலில் வெப்பத்தை உருவாக்கும் தெர்மோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனைக் கோடைக்காலத்தில் உட்கொள்வது உடலின் உட்புற வெப்பநிலையை அதிகரிக்கலாம். இது அதிகப்படியான வியர்வை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கலாம்.

எனவே, கோடைக்காலத்தில் அதிகப்படியாக கார உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்:

Image Source: Freepik

Read Next

Heat Reduce Tips: கொளுத்தும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக்க ஆயுர்வேத முறைகள் இதோ…

Disclaimer