Is chai tea good in summer: பொதுவாக காலை எழுந்ததும் டீ, காபி மற்றும் பால் போன்றவற்றை குடிக்கவே விரும்புகின்றனர். குளிர்காலம், கோடைக்காலம் என எந்த காலமானாலும் டீ அருந்துவதைத் தவிர்ப்பதை யாரும் விட மாட்டார்கள். அதிலும் பலரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் முதல் மூன்று முறை தேநீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் பலருக்கு மசாலா தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆம். தேநீரில் அனைத்து மசாலா பொருள்களும் சேர்ப்பது சுவையுடன் கூடிய நன்மைகளைத் தருகிறது.
மசாலா டீயைத் தயார் செய்ய இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற பல்வேறு மசாலாப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதில் சேர்க்கப்படக்கூடிய இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஒரு சூடான விளைவைக் கொண்டதாகும். இவை சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தர உதவுகிறது. இது போன்ற சூழ்நிலையில், கோடைக்காலத்தில் முழு மசாலாப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி அனைவரின் மனதில் எழும்.
கோடையில் ஒவ்வொரு நாளும் மசாலா தேநீர் குடிப்பது பாதுகாப்பானதா? இது குறித்து ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Using Expired Spices: காலாவதியான மசாலாப் பொருட்களை சமையலுக்கு பயன்படுத்துபவரா நீங்க? அப்போ இதை படியுங்க!
கோடை காலத்திற்கு மசாலா டீ குடிப்பது பாதுகாப்பானதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, கோடைக்காலத்தில் மசாலா டீ குடிப்பது அனைவருக்கும் ஏற்றதாக அமைகிறது. இது பாதுகாப்பானதாகும். ஆனால், பித்த இயல்பு உள்ளவர்கள் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், வெப்பத்தை உணருபவர்கள் அல்லது தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், மசாலா டீயில் பல முழு மசாலாப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் மசாலா டீயை உட்கொள்வதால், அது உடலில் வெப்பத்தை அதிகரித்து பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முக்கிய கட்டுரைகள்
கோடையில் எப்போது மசாலா டீ குடிக்க வேண்டும்?
கோடைக்காலத்தில் இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது மசாலா டீ குடிக்கலாம். மழைக்காலங்களில் தொற்று அபாயத்தைக் குறைக்க மசாலா டீயை அருந்தலாம். கபம் அல்லது வாத இயல்புடையவராக இருப்பின், அவர்கள் மசாலா டீயை உட்கொள்ளலாம். இதை உணவுக்குப் பிறகு அல்லது மாலையில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், காலையில் வெறும் வயிற்றில் மசாலா டீ குடிப்பது தீங்கு விளைவிக்கும்.
- கோடையில் மசாலா டீ குடிப்பவராக இருப்பின், அதை சிறிய அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஏனெனில், இதை அதிகளவில் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம்.
- சருமம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் கோடைக்காலத்தில் மசாலா டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம்.
- கோடைக்காலத்தில் வயிறு உப்புசம், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்தால், உடனடியாக மசாலா டீயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் உள்ள காரமான மசாலா பொருள்கள் செரிமான செயல்முறையை பாதிக்கலாம்.
- வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைக்கு மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதை கோடைக்கால உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: அட உங்களுக்கும் மசாலா டீ பிடிக்குமா? இதன் அளப்பரிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
முடிவு
கோடைக்காலத்தில் மசாலா டீ குடிப்பது அனைவருக்கும் பாதுகாப்பானதாகும். ஆனால், அதிக வெப்பம் உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முழு மசாலா பொருள்களையும் பயன்படுத்துவதால் அது வெப்பத்தை மேலும் அதிகரிக்கலாம். மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் அது உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் அபாயம் உண்டாகலாம்.
மேலும் இருமல், சளி உள்ளவர்களுக்கு அல்லது இயல்பான உடல் இயல்பு உள்ளவர்களுக்கு மசாலா டீ குடிப்பது நன்மை தரும். இதில் பொதுவான தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, மேலும் அறிய ஒரு ஆயுர்வேத நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Masala Tea: மசாலா டீ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… ஒரு கப்பில் எத்தனை நன்மைகள் பாருங்க!
Image Source: Freepik