‘டீ’ இந்தப் பெயரைக் கேட்டாலே மனதிற்குள் உற்சாகம் பொங்கும். அலுவலக நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், மாலையில் குடும்பத்தினருடன் பேசி சிரிக்கவும் “டீ டைம்” போல சிறப்பான நேரம் கிடையாது.
குறிப்பாக குளிர் காலத்தில் டீ கொடுக்கிற கிக்கே தனி. குறிப்பாக குளிர் காலத்தில் மசாலா டீ குடிப்பது வெறும் சுறுசுறுப்பை மட்டுமல்ல, பருவ கால தொற்றுக்களான ஜலதோஷம், சளி, இருமல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் தரும் அருமருந்தாகும்.
முக்கிய கட்டுரைகள்
சிம்பிளாக சொல்வது என்றால்… குளிர்காலத்தில் சூடான ஒரு கப் மசாலா டீ குடிப்பது பல நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.
டீயின் நன்மைகள்:
தேநீரில் உள்ள L-theanine போன்ற அமினோ அமிலங்கள் உடலின் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்கின்றன. குளிர்காலத்தில் உங்கள் தேநீரில் சில மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த டீயை தினமும் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது தொற்று, இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
மிளகு (BlackPepper):
தேநீரில் கருப்பு மிளகை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கருப்பு மிளகில் பைபரின் உள்ளது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இவற்றில் வைட்டமின்-ஏ மற்றும் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
மிளகு செரிமானத்தை துரிதப்படுத்தும். தேநீரில் மிளகை சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது மற்றும் சுவாச அமைப்புக்கு நல்லது. மிளகில் உள்ள பைபரின், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
மேலும் பைப்பரின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், நாள்பட்ட வீக்கம், கீல்வாதம் போன்ற கோளாறுகளுக்கு எதிராக செயல்படக்கூடியது.
இஞ்சி (Ginger):
டீ கடைக்குச் சென்றாலே இஞ்சி டீ ஆர்டர் செய்து குடிப்பவர்கள் ஏராளம். இஞ்சியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் கலவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உங்களுக்கு குமட்டல், அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகள் இருந்தால், கொஞ்சம் இஞ்சி டீ குடித்து பாருங்கள்.
ஏலக்காய் (Cardamon):
ஏலக்காய் உங்கள் தேநீருக்கு நல்ல சுவையையும் மணத்தையும் தருகிறது. வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை ஏலக்காயில் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மூச்சுத்திணறல், இருமல் மற்றும் மார்பில் இறுக்கம் போன்ற ஆஸ்துமாவின் பல அறிகுறிகளை இது விடுவிக்கிறது.
இதையும் படிங்க: Green tea vs Coffee: காபியை விட கிரீன் டீ நல்லதா? - உண்மை இதோ!
இது இருமல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியிலும் சிறந்த பலன்களைத் தருகிறது. நுரையீரலுக்கு ஆக்சிஜன் சப்ளையை மேம்படுத்தி, சுவாசக் கோளாறுகளைத் தடுக்கும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.
இலவங்கம் (Cloves):
கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. கிராம்புகளை தொடர்ந்து சேர்த்து வந்தால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.
கிராம்புகளில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், மாங்கனீஸ், வைட்டமின் ஏ, சி மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. கிராம்புகளில் யூஜெனால் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இலவங்க பட்டை (Cinnamon):
வைட்டமின்களுடன், இலவங்கப்பட்டையில் இரும்பு, துத்தநாகம், கால்சியம், குரோமியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
இலவங்கப்பட்டை பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின் மற்றும் கோலின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களில் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தேநீர் தயாரிக்கும் போது அதில் சிறிது இலவங்கப்பட்டை சேர்த்து, அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
Image Source:Freepik