Coffee Vs Green Tea: காலையில் கண் விழித்ததுமே காபி அல்லது டீ குடித்தால் தான் அன்றைய தினமே சுறுசுறுப்பாக இருக்கும் என பலரும் சொல்ல கேட்டிருப்போம். அதுவும் சில காபி, டீ பிரியர்கள் தினமும் 4 அல்லது 5 கப் கூட பருவார்கள். காபி இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற அளவிற்கு அதனை விரும்புவோரும் உண்டு. ஆனால் காபி, டீ பருகுவது உடலுக்கு தீங்கானது, அதற்கு மாற்றாக கிரீன் டீ குடிப்பதே ஆரோக்கியமானது என்ற கருந்தும் நிலவி வருகிறது.
எனவே ஊட்டச்சத்து நிபுணரான ஷாலினி சுதாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காபி, டீ அல்லது கிரீன் டீ இரண்டில் எதை பருவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது குறித்து விளக்கியுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
80 சதவீத மக்கள் தங்களது காபி அல்லது டீ பழக்கத்தில் இருந்து விடுபட்டு, கிரீன் டீ பருக ஆரம்பிப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி, எந்த உணவுக்கும் பயப்பட வேண்டாம், நீங்கள் மிதமாகப் பழகினால் அனைத்து வகையான இயற்கை உணவுகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும் என்கிறார்.
காபி vs கிரீன் டீ:
வறுத்து அரைத்து பொடியாக்கப்பட்ட காபி தூள் மூலம் தயாரிக்கப்படும் காபிக்கும், தேயிலை செடியில் இருந்து பறிக்கப்படும் இலைகளை காயவைத்து தயாரிக்கப்படும் கிரீன் டீக்கும் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லை என்கிறார் ஷாலினி சுதாகரன்.
- ஒரு கப் காபியில் 80 மில்லி கிராம் அளவிற்கு காஃபின் உள்ளது. அதே கிரீன் டீயில் சற்றே குறைவாக 40 மில்லி கிராம் அளவிற்கு மட்டுமே உள்ளது.
- கிரீன் டீயில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் காபியில் தான் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ளார்.
- உடலில் உள்ள கழிவுகளை நீக்கக்கூடிய டீடாக்ஸ் வேலையை (Detox) கிரீன் டீ செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணிகளை கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல், நிணநீர போன்ற உடல் உறுப்புகள் மட்டுமே செய்ய முடியும் என்றும், எப்போதும் கிரீன் டீ டிடாக்ஸ் பானமாக செயல்படாது என அடித்துக்கூறுகிறார்.
- கிரீன் டீயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ பெரும் பங்கு வகிப்பது கிடையாது என ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.
இதையும் படியுங்கள்: மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் இயற்கை வழிகள் இதோ!
காபி பருகுவதால் நன்மைகள் உண்டா?
காபி பருகுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
- காபியில் அடினோசின் என்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது நரம்புகளை ஊக்கப்படுத்தி, சோர்வை நீக்கி உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது.
- காபியில் கிரீன் டீயை விட அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
- வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- காபியில் உள்ள Epigallocatechin gallate (EGCG) மற்றும் குளோரோஜெனிக் அமிலம் கல்லீரல், எண்டோமெட்ரியல் மற்றும் தோல் புற்றுநோய்களுக்கு எதிராக செயலற்றக்கூடியது என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
- காபி, டீயில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை நீக்குகிறது.
- காபி நரம்புகளை தூண்டுவதால் மூளை சுறுசுறுப்படைய உதவுகிறது.
- கடந்த ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தினமும் 2 முதல் 3 கப் காபி குடிப்பது இதய நோய், இதய செயலிழப்பு உள்ளிட்ட ஆபத்துக்களை 10 முதல் 15 சதவீதம் வரை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.