Sat Sep 12, 2026 | 01:44 AM IST

நுரையீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்!

How To Clean Lungs Naturally: நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, நுரையீரல் மற்றும் இதயம். நாம் சுவாசிக்கும்போது நாம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை, நமது நுரையீரல் வடிகட்டி உடலுக்கு அனுப்ப உதவுகிறது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. நுரையீரல் உடலில் இருந்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.

ஆனால் நமது நுரையீரல் சரியாகச் செயல்படாதபோது, ​​அது பல உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும். தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதாவது, ஏராளமான அழுக்குகள், தீங்கு விளைவிக்கும் துகள்கள் மற்றும் தார் போன்றவை நமது நுரையீரலில் குவிந்து, நமது நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அதன் செயல்பாட்டையும் பாதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

எனவே, நுரையீரலை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் இதன் பாதிப்பை பாதியாக குறைக்கலாம். நுரையீரலை இயற்கையான சுத்தம் செய்யவதற்கான சில எளிய உதவிக்குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம். இதை பின்பற்றுவதன் மூலம் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நுரையீரலை சுத்தம் செய்வதற்கான 5 வழிகள் இங்கே:

காற்று சுத்திகரிப்பான் (Air Purifier)

வீட்டில் காற்று சுத்திகரிப்பு கருவியை நிறுவுவது வீட்டின் காற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. ஏனெனில், வீட்டில் கூட தூசி, அழுக்கு மற்றும் மாசு உள்ளது. இது வீட்டில் சுதந்திரமாக சுவாசிக்க உதவுகிறது மற்றும் நுரையீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

உடற்பயிற்சி (Exercise)

உடற்பயிற்சி என்றது கடுமையான உடற்பயிற்சி இல்லை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம் மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் போன்றவற்றை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் செய்வதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது நுரையீரலில் தேங்கியுள்ள அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

நீராவி சிகிச்சை (Steam Therapy)

தண்ணீரை சூடாக்கி, அதில் சில மூலிகை பொருட்களை சேர்த்து ஆவி பிடித்தால், காற்றுப் பாதைகளைத் திறந்து நுரையீரலில் படிந்திருக்கும் சளியை தளர்த்த உதவும். அதுமட்டும் அல்ல இந்த முறை நுரையீரலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

க்ரீன் டீ (Green Tea)

க்ரீன் டீ உட்கொள்வது நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், புகைபிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைக்கவும் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது தீங்கு விளைவிக்கும் துகள்களை அழிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

அழற்சி எதிர்ப்பு உணவுகள் (Anti Inflammatory Foods)

பெர்ரி, செர்ரி, ப்ரோக்கோலி, டார்க் சாக்லேட், மஞ்சள், இலை கீரைகள், ஆலிவ், பீன்ஸ் மற்றும் பருப்பு போன்றவற்றை உணவு வழக்கத்தில் சேர்க்கவும். இது நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. மேலும், நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Orange Juice Benefits: குளிர் காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content