How can i detox my kidneys at Home: உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுடன், சரியான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டியது அவசியம். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சிறுநீரகங்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இவை உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்கிறது.
இது சரியாக செயல்படாவிட்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். இவற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சிறுநீரகத்தை சுத்தம் செய்ய சில மொல்லிகை இலைகள் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த இலைகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தை இயற்கையாக டீடாக்ஸ் செய்யலாம். இதனால் பல்வேறு நோய் தொற்றுக்களில் இருந்து நாம்மை பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yellow Watermelon: இனி சிவப்பு தர்பூசணிக்கு குட்பை.. மஞ்சள் தர்பூசணி வாங்கி சாப்பிடுங்க அம்புட்டு நல்லது!
பலர் சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்ய பல்வேறு வகையான மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். மருந்துகளை உட்கொள்வதற்குப் பதிலாக, இலைகளின் உதவியுடன் சிறுநீரகங்களை இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்யலாம். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் இலைகள் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதினா இலைகள்
புதினா இலைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு, சிறுநீரகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீரகம் ஆரோக்கியமாக வைக்க, புதினாவால் செய்யப்பட்ட தேநீர் அல்லது கஷாயத்தை குடிக்கலாம். இந்த தேநீர் செரிமான அமைப்புக்கு ஆரோக்கியமானது மட்டுமின்றி, தலைவலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.
துளசி இலைகள்
துளசி இலைகள் பல நோய்களை குணப்படுத்தும் குணம் உடையது. இதில், உள்ள ஆன்டிபாக்டீரியல் சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. முதலில், 5 முதல் 7 இலைகளை கழுவி சுத்தம் செய்யவும். இப்போது 1 கிளாஸ் தண்ணீரை சூடாக்கவும். அதில், துளசி இலைகளை சேர்த்து தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். பாதி தண்ணீர் வந்ததும் வடிகட்டி அந்த நீரை குடிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல செரிமானம் மட்டுமல்ல.. எந்தவொரு குடல் பிரச்சனையும் வராமல் இருக்க சிம்பிளான இந்த உணவுகளை சாப்பிடுங்க
கொத்துமல்லி தழை
கொத்தமல்லி இலைகளை உட்கொள்வது சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. இதன் நுகர்வு செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து சிறுநீரகங்களை சுத்தம் செய்யும். இதற்கு முதலில், 5 முதல் 6 இலைகளை கழுவி, 1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இப்போது இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்வதால் சிறுநீரகங்கள் சுத்தமாகும்.
மூக்கிரட்டை கீரை
புனர்நவ இலைகள் என ஆங்கிலத்தில் கூறப்படும் மூக்கிரட்டை கீரை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த இலை நச்சுப் பொருட்களை அகற்றி சிறுநீரகத்தை சுத்தமாக்க உதவுகிறது. சிறுநீரக சிறுநீர் பிரச்சனைகளையும் சரி செய்யும். முதலில், மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தவும். பின்னர், அந்த இலைகளை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரை வடிகட்டி குடிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Pears: மலச்சிக்கல் முதல் எடை குறைப்பு வரை பல நன்மைகளை வழங்கும் பேரிக்காய்... எப்படி சாப்பிடணும்?
சிறுநீரகத்தை சுத்தமாக வைக்க இந்த இலைகளை சாப்பிடுங்கள். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
Pic Courtesy: Freepik