Natural way to clean my lungs: நம் அன்றாட வாழ்வில் சுவாசம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக, சுவாசம் என்பது நுரையீரலுக்குள் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றும் செயல்முறையைக் குறிக்கிறது. இது உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்கவும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றவும் உதவுகிறது. இது உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே தான் நுரையீரல் முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு பிரச்சனை ஏற்படும் வரை நம் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பற்றி பெரிதும் சிந்திப்பதில்லை.
இன்றைய காலத்தில் அதிகரித்து வரும் மாசு அளவு, புகைபிடிப்பது மற்றும் இன்னும் பிற சுற்றுச்சூழல் நச்சுக்கள் போன்றவற்றால் நுரையீரலில் அசுத்தங்கள் அடைக்கப்படுகிறது. எனினும், இயற்கையாகவே நமது நுரையீரலை சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைக்கவும், புத்துயிர் பெறவும் பல்வேறு வழிகள் உள்ளது. இதில் நுரையீரலை நச்சுத்தன்மையாக்க உதவும் இயற்கையான மற்றும் பயனுள்ள முறைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Lung Cleansing : நுரையீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய எளிமையான வழிகள் இதோ!
இயற்கையாகவே நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
பிராணயாமா
யோகாசனங்களின் இன்றியமையாத ஆசனமாக பிராணயாமா அமைகிறது. இது சுவாசப் பயிற்சியை விட மேம்பட்ட ஆசனமாகும். அதாவது கபாலபதி மற்றும் அனுலோம் விலோம் போன்ற நுட்பங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தவும், ஆக்ஸிஜன் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், நாசிப் பாதைகளை அழிக்கவும் உதவுகிறது. இந்த வகை பயிற்சிகளை மேற்கொள்வது தளர்வை ஊக்குவிக்கிறது. மேலும், மன அழுத்தத்தை குறைக்கிறது. இது மறைமுகமாக நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க பலன்களைப் பெற தினமும் காலை 10-15 நிமிடங்கள் பிராணயாமா செய்யலாம்.
துளசி நீராவி சிகிச்சை
நுரையீரலை சுத்தப்படுத்துவதற்கான ஒரு எளிய மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாக நீராவி சிகிச்சை அமைகிறது. இதற்கு ஒரு கைப்பிடி புதிய துளசி இலைகளை கொதிக்கும் நீரில் சேர்த்து நீராவியை உள்ளிழுக்க வேண்டும். ஆய்வு ஒன்றில், ஆயுர்வேதத்தில் துளசியில் நிறைந்துள்ள குணப்படுத்தும் பண்புகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. மேலும் இது பல்வேறு பொதுவான உடல்நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. துளசியில் நிறைந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாச பிரச்சனைகளைப் போக்கவும், சளியை நீக்கவும் உதவுகிறது. பொதுவாக பருவகால மாற்றத்தின் போது ஏற்படும் சுவாச நோய்களைத் தவிர்க்க இது ஒரு சிறந்த தீர்வாகும்.
மூலிகை தேநீர்
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மூலிகை தேநீர் பெரிதும் நன்மை பயக்கும். இதற்கு முலேத்தி, மிளகுக்கீரை மற்றும் இஞ்சி போன்ற மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றில், இந்த மூலிகை தேநீர் வகைகளை எடுத்துக் கொள்வது நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக சில பாதுகாப்பு விளைவைத் தருகிறது. இந்த மூன்று பொருள்களை ஒன்றாக வேகவைத்து ஒரு இனிமையான தேநீரைத் தயார் செய்யலாம். இதில் முலேத்தி வீக்கத்தைக் குறைக்கவும், இஞ்சி நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. எனவே, இந்த வகை தேநீரை உட்கொள்வதன் மூலம் நுரையீரலை சுத்தமாக வைத்திருக்கவும், சுவாசத்தை எளிதாக்கவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Detox Drinks: நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற.. இந்த பானங்களை குடிக்கவும்..
மஞ்சள் பால்
கோல்டன் பால் என்றழைக்கப்படும் மஞ்சள் பால் ஒரு எளிய மற்றும் சிறந்த வீட்டு வைத்தியமாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவையில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு கப் சூடான மஞ்சள் பால் குடிப்பது நுரையீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. இது சுவாச தொற்றுக்களைக் குறைக்க வழிவகுக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள்
பொதுவாக, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நுரையீரலை மாசு மற்றும் நச்சுகளால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆம்லா, கொய்யா, மாதுளை போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்த பழங்களில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை நுரையீரல் திசுக்களை சரிசெய்து ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: lungs detox drink: இயற்கையான முறையில் நுரையீரலை சுத்தப்படுத்த வேண்டுமா.? இதை குடிக்கவும்..
Image Source: Freepik