நுரையீரலை டிடாக்ஸ் செய்து ஒட்டுமொத்த சளியையும் வெளியேற்ற இந்த ட்ரிங்ஸ் குடிங்க

What drinks clear mucus from lungs: மாசுபாடு மற்றும் இன்னும் பல்வேறு காரணங்களால் சிறுநீரில் சளி சேரத் தொடங்கலாம். இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற சில நச்சு நீக்க பானங்கள் உள்ளது. இதில் நுரையீரல் டிடாக்ஸ் பானங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நுரையீரலை டிடாக்ஸ் செய்து ஒட்டுமொத்த சளியையும் வெளியேற்ற இந்த ட்ரிங்ஸ் குடிங்க


How do I detox my lungs from mucus: உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளில் ஒன்றாக நுரையீரலும் ஒன்றாகும். இது முழு உடலுக்கும் ஆக்ஸிஜனை வழங்கவும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றவும் உதவுகிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். மாசுபாடு, பருவகால ஒவ்வாமை, சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் புகைபிடித்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, மக்களின் நுரையீரலில் சளி சேரத் தொடங்குகிறது. இதனால், மக்கள் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

இந்நிலையில், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சில நச்சு நீக்கும் பானங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது நுரையீரலில் குவிந்துள்ள சளியை இயற்கையாகவே நீக்க உதவுகிறது. இது போன்ற சூழ்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள ஏஞ்சல்கேர்-ஏ ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையத்தின் இயக்குநரான உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் அவர்கள் நுரையீரலை நச்சு நீக்கி சளியை வெளியேற்றும் பானங்கள் குறித்து விவரித்துள்ளார்.

சளியை வெளியேற்ற நுரையீரலை நச்சு நீக்க உதவும் பானங்கள்

கிராம்பு டீ

கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இதில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கவும், தொற்றுநோயைத் தடுக்கவும், சளியை தளர்த்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Detox Drinks: நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற.. இந்த பானங்களை குடிக்கவும்..

நுரையீரலை நச்சு நீக்க கிராம்பு டீ தரும் நன்மைகள்

சளியிலிருந்து நிவாரணம் அளிக்க

கிராம்பு தேநீரில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டை வலியைப் போக்கவும், சுவாசக் குழாயில் சளியை உருவாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லவும், சளியை வெளியேற்றவும், மார்பு இறுக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்க

கிராம்புகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சுவாசக்குழாய் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. இது மூச்சுக்குழாய் குழாய்கள் அல்லது காற்றுப்பாதைகளில் தொற்றுக்கள் நுழைவதைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

கிராம்பு டீ தயாரிக்கும் முறை

  • முதலில் 1 முதல் 1.5 கப் தண்ணீரில் 4-5 கிராம்புகளைச் சேர்க்க வேண்டும்.
  • இப்போது, இதை 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு இதை வடிகட்டி உட்கொள்ளலாம்.
  • விரும்பினால், இந்த தேநீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

இஞ்சி டீ

இஞ்சி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இஞ்சி டீ அருந்துவது சுவாசப் பிரச்சினைகள், சளி மற்றும் தசை தளர்வு போன்ற பல பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.

நுரையீரலை நச்சு நீக்க இஞ்சி டீ தரும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

இஞ்சி டீயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதை உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது முகப்பருவை ஏற்படுத்தும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: நுரையீரலில் தங்கியிருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்த இந்த ஒரு ட்ரிங்க்ஸ் போதும்... 2 வாரத்துக்கு ஒருமுறை குடிச்சால் போதும்...!

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

இஞ்சியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இவை உடல் மற்றும் நுரையீரலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நீக்கவும் உதவுகிறது.

சளியை வெளியேற்றுவதற்கு

இஞ்சி டீயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதை அருந்துவது தடிமனான சளியை உடைத்து மெல்லியதாக்குகிறது. இவை பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கவும், சுவாச மண்டலத்தில் ஏற்படும் அழற்சியின் சிக்கலைக் குறைக்கவும் உதவுகிறது.

இஞ்சி டீயைத் தயார் செய்யும் முறை

  • இந்த டீ தயார் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது இந்த தண்ணீரில் இஞ்சியை அரைத்து அல்லது நன்றாக நசுக்கி சேர்க்க வேண்டும்.
  • இதை நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்னர் இதை வடிகட்டில் உட்கொள்ளலாம்.
  • விரும்பினால், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம்.
  • இதை தொற்று ஏற்படும் போது உட்கொள்வது நன்மை பயக்கும்.

முடிவு

மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பு டீ மற்றும் இஞ்சி டீ அருந்துவது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை நீக்குவதுடன், நுரையீரலை நச்சு நீக்கம் செய்கிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றி நுரையீரல் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: lungs detox drink: இயற்கையான முறையில் நுரையீரலை சுத்தப்படுத்த வேண்டுமா.? இதை குடிக்கவும்..

Image Source: Freepik

Read Next

இல்லத்தரசிகளே நோட் பண்ணிக்கோங்க... மழைக்காலத்தில் பருப்பு, அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க சூப்பர் டிப்ஸ்...!

Disclaimer

குறிச்சொற்கள்