Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Doctor Verified

கல்லீரலை டிடாக்ஸ் செய்ய வேண்டுமா? தினமும் இந்த 9 பானங்கள் போதும்… மருத்துவர் ஜோசப் சல்ஹாப் பரிந்துரை!

கல்லீரல் நச்சுகளை நீக்க எளிய பானங்கள் என்ன? மேட்சா, கிரீன் டீ, பிளாக் காபி, பீட்ரூட் ஜூஸ் உள்ளிட்ட 8 விஞ்ஞான ஆதாரபூர்வ பானங்களை மருத்துவர் ஜோசப் பரிந்துரைக்கிறார். தினசரி குடித்தால் இயற்கையாக கல்லீரல் டிடாக்ஸ் செய்ய உதவும்.

நம் உடலில் இருக்கும் கோடிக்கணக்கான நச்சு பொருட்களை வடிகட்டி, செரிமானத்தை சீராக்கி, உடலை சமநிலைப்படுத்தி வைத்திருக்கும் கல்லீரல் தினமும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அத்தகைய கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நாம் சில எளிய பானங்களை தினசரி குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் ஜோசப் சல்ஹாப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் பரிந்துரைத்த விஞ்ஞான ஆதாரபூர்வ 9 பானங்கள் இங்கே.

கல்லீரலை டிடாக்ஸ் செய்யும் பானங்கள்

மேட்சா

மேட்சாவில் உள்ள EGCG ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் கல்லீரலில் கொழுப்பு மாற்றத்தை சீராக்கி, கல்லீரலுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள கேடசின் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் கல்லீரல் கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஆதரிக்கும்.

பிளாக் காபி

இதில் உள்ள குளோரோஜெனிக் அமிலங்கள் கல்லீரல் கொழுப்பை குறைக்கும். மேலும் மைக்ரோ இரத்த ஓட்டம் மேம்படும்.

பிளாக் டீ

பிளாக் டீயில் இருக்கும் தியாப்ளேவின்ஸ் கல்லீரல் கொழுப்பு மேலாண்மை, ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸில் உள்ள பெட்டலெயின்ஸ் + நைட்ரேட்டுகள் நைட்ரிக் ஆக்சைடு அளவை உயர்த்தும், கல்லீரல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: சிறந்த குடல் செயல்பாட்டுக்கு உதவும் 10 பழங்கள்.! மருத்துவர் பரிந்துரை..

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸில் உள்ள புனிகலஜின் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் கல்லீரல் கொழுப்பு பராமரிப்பையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

ஹாட் கோகோ

ஹாட் கோகோவில் உள்ள கோகோ பிளாவனால்கள் நைட்ரிக் ஆக்சைடு அதிகரிக்கும், கல்லீரல் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மஞ்சள்-இஞ்சி டீ

மஞ்சளில் உள்ள குர்குமின், இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல் இரண்டும் சேர்ந்து பைல் ப்ளோ மேம்பட்டு, கொழுப்பு கல்லீரலுக்கு உதவும்.

பெரி ஸ்மூத்தி

புளிப்பு பெரிகள் நிறைந்த ஸ்மூத்திகளில் உள்ள ஆந்தோசயனின் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் கல்லீரல் கொழுப்பு மாற்றத்தை சீராக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

View this post on Instagram

A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc)

இறுதியாக..

கல்லீரல் ஆரோக்கியம் என்பது ஒரு நாள் டிடாக்ஸ் அல்ல; தினசரி பழக்கத்தில் சேர்க்கப்படும் ஆரோக்கியமான பானங்கள்தான் சிறந்த மருந்து.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. கல்லீரல் நோய், கொழுப்பு கல்லீரல் அல்லது பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களின் மருத்துவரை சந்தித்து தனிப்பட்ட ஆலோசனை பெற வேண்டும்.

Read Next

இதயம் பலமாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகள் தான் சிறந்த மருந்து.. டாக்டர் சிவராமன் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 14, 2025 16:19 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content