$
வெண்டைக்காய் தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: பல வகையான ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காய் தண்ணீரில் நிறைந்து இருக்கின்றன, அவை உடல் பருமனைக் குறைக்கவும், பார்வை திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.
வெண்டைக்காய் தண்ணீரின் பலன்கள்
அனைத்து வயதினரும் விரும்பி ருசித்துச் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி தான் வெண்டைக்காய். குறிப்பாகக் காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளும் கூட வெண்டைக்காயை பார்த்தால் குஷி ஆகி விடுவார்கள். புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் 'A', ‘B’, 'C', தயாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் காணப்படுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் வெண்டைக்காய் உதவுகிறது. வெண்டைக்காய் மட்டுமல்ல, வெண்டைக்காயின் நீரும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதைத் தயாரிக்கும் முறைபற்றித் தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காய் தண்ணீர் செய்வது எப்படி?
முறை 1
ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர்
வெண்டைக்காய் தண்ணீரை தயாரிக்க, 8 முதல் 10 வெண்டைக்காய்களை நடுவிலிருந்து வெட்டி அதை 2 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
இரவு முழுதும் நன்கு ஊறிய வெண்டைக்காய்களிலிருந்து மீதமுள்ள சாற்றை பிழிந்து ஊறவைத்தை தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அவ்வளவு தான், வெண்டைக்காய் தண்ணீர் தயார்.
இந்த முறை தவிர வெண்டைக்காய் தண்ணீரை பின்வரும் முறைப்படி கொதிக்க வைத்தும் தயாரிக்கலாம்.
முறை 2
கொதிக்கவைத்த வெண்டைக்காய் தண்ணீர்
வெண்டைக்காய் தண்ணீர் தயாரிக்க, 2 கிளாஸ் தண்ணீரை சூடாக்கவும். பிறகு அதில் 10 முதல் 15 வெண்டைக்காய்களை சேர்க்கவும்.
வெண்டைக்காயை தண்ணீருடன் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள்வரை கொதிக்க விடவும்.
வெண்டைக்காயின் சாறு அனைத்தும் தண்ணீரில் வெளியேறியதும், அதை ஒரு கிளாஸில் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் வெண்டைக்காய் தண்ணீர் குடிக்க தயார்.
வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்
வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 1 முதல் 2 முறை வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது நல்லது.
கண்பார்வை அதிகரிக்கும்
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துகிறது. எனவே கண்பார்வையை அதிகரிக்க வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடிக்கலாம்.
இரத்த சோகையை தடுக்கும்
வெண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது. வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.
எடையைக் கட்டுப்படுத்த உதவும்
வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெண்டைக்காய் தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?
உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெண்டைக்காய் தண்ணீரை குடிக்கும்பொழுது அதன் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
குறிப்பு: நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ வெண்டைக்காய் தண்ணீரை ஒருபோதும் வெறும் வயிற்றில் உட்கொள்ளக் கூடாது. வெண்டைக்காய் தண்ணீரைக் குடிப்பதற்கு முன் ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும். வெண்டைக்காய்க்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அதன் தண்ணீரை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.