Sat Sep 12, 2026 | 12:23 AM IST

Doctor Verified

வெண்டைக்காய் சாதம் – குறைத்து மதிக்கப்படும் ஆரோக்கிய ரகசியம்.! மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் நன்மைகள்..

வெண்டைக்காயை சாதத்தில் சேர்த்து சமைப்பது ஒரு ஆரோக்கிய ரகசியம் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறுகிறார். வெண்டைக்காய் சாதம் எடை குறைப்புக்கும் செரிமானத்துக்கும் ஏன் சிறந்தது என்று அறிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக நாம் வெண்டைக்காயை வறுவல், கறி அல்லது சாம்பாரில் மட்டுமே சேர்க்கிறோம். ஆனால், சாதத்துடன் வெண்டைக்காயை சேர்த்து சமைப்பது என்பது பலருக்குத் தெரியாத ஒரு ஆரோக்கிய ரகசியம். இது குறித்து பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் (Orthopedic & Sports Surgeon) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெண்டைக்காய் – லைட் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது

மருத்துவர் கூறுகையில், வெண்டைக்காயில் 100 கிராமுக்கு வெறும் 30–40 கலோரி மட்டுமே உள்ளது. அதனால், இது எடை குறைக்க முயற்சிக்கும் அனைவருக்கும் சிறந்த உணவாகும். வெண்டைக்காயில் உள்ள இயற்கை நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

முகிலேஜ் – வெண்டைக்காயின் இயற்கை ஜெல்

வெண்டைக்காயின் சிறப்பு அம்சம் அதன் முகிலேஜ் (Mucilage) எனப்படும் இயற்கை ஜெல் போன்ற பொருள். இந்த முகிலேஜ், சாதத்தில் உள்ள ஒவ்வொரு அரிசி தானியத்தையும் ஒரு நுண்ணிய ஊட்டச்சத்து அடுக்கால் மூடுகிறது. இதனால், சாதத்தின் வைட்டமின்களும் தாதுக்களும் உடலில் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்புக்கு இரவில் சாதம் சாப்பிடலாமா.? உணவியல் நிபுணர் விளக்கம்..

சாதாரண சாதம் – ஆரோக்கிய சாதமாக மாறுகிறது!

வெண்டைக்காய் சாதம் சாப்பிடுவதால் சாதாரண வெள்ளை அரிசியும் சிறந்த ஆரோக்கிய உணவாக மாறுகிறது. இது உடலுக்கு தேவையான மைக்ரோநியூட்ரியன்ட்கள் (Micronutrients) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் வழங்குகிறது. இதன் மூலம், சாதம் உண்ட பிறகு வரும் சோர்வு குறைந்து, நீண்ட நேரம் ஆற்றல் நிலைத்து இருக்கும்.

சீரான செரிமானம் – நீண்ட நேர ஆற்றல்

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, உணவின் செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) திடீர் உயர்வு பெறாமல், மெதுவாக சீராக இருக்கிறது. இதன் மூலம், சாதத்தின் குளைசீமிக் குறியீடு (Glycaemic Index) குறைகிறது — இது நீரிழிவு (Diabetes) உள்ளவர்களுக்கும் மிகச்சிறந்த நன்மை.

குடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை ப்ரிபயாட்டிக்

மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறுகையில், வெண்டைக்காய் சாதம் ஒரு இயற்கை ப்ரிபயாட்டிக் உணவு. இது குடல் பாக்டீரியாக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதனால் வயிற்று வீக்கம், மலச்சிக்கல், செரிமானக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் தணியும்.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

வெண்டைக்காய் சாதம் எப்படி செய்யலாம்?

* ஒரு சிறிய அளவு வெண்டைக்காயை நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கவும்.

* அதில் சமைத்த சாதத்தைச் சேர்த்து நன்றாக கிளறவும்.

* தேவையெனில் சிறிதளவு மிளகு அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சுவையும் நன்மையும் கூடும்.

இப்படி தயாராகும் வெண்டைக்காய் சாதம் – எடை கட்டுப்பாடு, செரிமானம், குடல் ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகிய அனைத்திலும் அற்புத பலனை தரும்.

இறுதியாக..

வெண்டைக்காய் சாதம் என்பது சாதாரண உணவல்ல – சாதத்தையும் வெண்டைக்காயையும் இணைக்கும் ஆரோக்கிய கலவை. மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறுவது போல, இது ஒரு “அண்மையில் மறக்கப்பட்ட ஆனால் சக்திவாய்ந்த ஆரோக்கிய ரகசியம்.” சீரான உணவுமுறை, போதுமான நீர் உட்கொள்ளல், உடற்பயிற்சி ஆகியவற்றுடன் இதைச் சேர்த்தால் உடல் எடை குறைவு மட்டுமல்ல, முழுமையான ஆரோக்கியத்தையும் பெறலாம்.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனையாகாது. தனிப்பட்ட உடல்நிலை, நோய்கள், மருந்துகள் போன்றவை இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

வயிறு உப்புசத்தை உடனே குறைக்கும் உணவுகள்.! மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 06, 2025 11:35 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content