மாட்டு நாக்கு (Beef tongue) சில நாடுகளில், விரும்பி சாப்பிடும் உணவு. ஆனால், இது எடை குறைக்க உதவுமா அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்த சந்தேகத்தைப் பலர் கேட்கிறார்கள். இதற்கான விளக்கத்தை டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தனது இஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புரதமும் சக்தியும் (Protein + Energy Boost)
* 100 கிராம் மாட்டு நாக்கில் சுமார் 250 கலோரி உள்ளது. அதில் 20 கிராம் புரதமும், 20 கிராம் கொழுப்பும் அடங்கியுள்ளது.
* இதில் உள்ள B-விடாமின்கள் மூளை, நரம்புகள் மற்றும் ஆற்றலுக்கு உதவும். குறிப்பாக ஜிம்மிற்குச் செல்லும்ோர், அதிக உழைப்பு செய்பவர்கள் உடனடியாக சக்தி பெறலாம்.
* ஆனால், கொழுப்பு (fat) அளவு அதிகமாக இருப்பதால், சரியான முறையில் சமைப்பது மிகவும் முக்கியம்.
கொலஸ்ட்ரால் (Cholesterol Watch)
* 100 கிராம் மாட்டு நாக்கில் 100–150 mg வரை கொலஸ்ட்ரால் உள்ளது.
* லிபிட் நார்மல் உள்ளவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது இருமுறை சாப்பிடுவது பிரச்சினை இல்லை.
* கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் இதயம், இரத்தக் குழாய் பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உண்டு.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைக்க எது சிறந்தது? Bone Broth vs Bone Marrow – மருத்துவர் விளக்கம்..
கீல்வாத நோயாளிகளுக்கு எச்சரிக்கை
* மாட்டு நாக்கு மிதமான அளவு Purine கொண்டது. இதனால் கீல்வாத நோயாளிகளுக்கு மூட்டு வலி அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
* ஏற்கனவே uric acid அதிகம் உள்ளவர்கள் அல்லது கீல்வாத பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
சமையல் முறை முக்கியம்
* மாட்டு நாக்கில் ஏற்கனவே 20 கிராம் கொழுப்பு உள்ளதால், அதை deep-fry செய்வது பரிந்துரைக்கப்படவில்லை.
* Grill அல்லது Pan-fry செய்து, குறைந்த எண்ணெய் (oil spray) பயன்படுத்தி சமைத்தால் கலோரி குறைந்து, ஆரோக்கியமாக இருக்கும்.
* அதிக மசாலா, அதிக எண்ணெய் சேர்த்தால் weight lossக்கு பதிலாக weight gain ஏற்படும் அபாயம் அதிகம்.
View this post on Instagram
டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் ஆலோசனைகள்
* மாட்டு நாக்கு சாப்பிடுபவர்கள் portion control கடைபிடிக்க வேண்டும்.
* வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சாப்பிடக் கூடாது.
* காய்கறி, நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும்.
* அதிக கொலஸ்ட்ரால், கீல்வாதம், கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
இறுதியாக..
மாட்டு நாக்கு சாப்பிடுவது புரதமும், B-விடாமின்களும் அளிக்கிறது. ஆனால், அதே சமயம் இதில் அதிக கொழுப்பு, கொலஸ்ட்ரால் இருப்பதால், எடை இழப்புக்கு நேரடியாக நன்மை பயக்காது.
எடை குறைக்க நினைப்பவர்கள் எலும்பு சூப், மெலிந்த புரதங்கள், சிறு தானியங்கள், தினை போன்ற குறைந்த கலோரி, அதிக புரோட்டீன் மீது கவனம் செலுத்த வேண்டும்.
மாட்டு நாக்கு சாப்பிட விரும்பினால், சிறிய அளவு, சுவையாக, சரியான சமையல் முறை பின்பற்றினால் மட்டுமே அது ஆரோக்கியமாக இருக்கும்.
{Disclaimer: இந்தக் கட்டுரை டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நல பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.}
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 17, 2025 11:49 IST
Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி