Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Doctor Verified

ஒவ்வொரு உணவிலும் புரதம் ஏன் அவசியம்.? டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம்..

Dr. சந்தோஷ் ஜேக்கப் கூறும் புரதத்தின் முக்கியத்துவம்: எலும்புகள், தசைகள், நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கான புரதத்தின் நன்மைகள் மற்றும் ஏன் தினசரி உணவில் புரதம் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

“உடலை இயக்க கார்போஹைட்ரேட், கொழுப்பு தேவையான எரிபொருள் மட்டுமே. ஆனால் உடலை உருவாக்கி பராமரிக்க வேண்டியது புரதம் தான்,” என்று ஆர்த்தோபீடிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் சர்ஜன் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் வலியுறுத்துகிறார்.

மனித உடல் எலும்புகள், தசைகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், நரம்பியல் செயல்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படை கட்டுமானக் கல்லாக புரதம் (Protein) செயல்படுகிறது. அதனால் ஒவ்வொரு உணவிலும் புரதம் அவசியம் என்கிறார் அவர்.

புரதம் – உடலின் கட்டுமானம்

* புரதம் இல்லாமல் மனித உடல் முழுமையாக வளர்ச்சி பெற முடியாது.

* எலும்புகள், தசைகள், தோல், முடி, ஹார்மோன்கள் அனைத்தையும் உருவாக்கும் அடிப்படை மூலப்பொருள்.

* குழந்தைகள் தங்கள் உயரமும் உடல் வளர்ச்சியும் பெற, உணவில் புரதம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கான 10 புரதம் நிறைந்த உணவுகள் – டாக்டர் பால் விளக்கம்

புரதத்தின் நன்மைகள்

* உடல் வலிமை & சக்தி

தசைகள் வளர்ச்சி பெற்று, உடல் வலிமை அதிகரிக்க உதவுகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தி

புரதம் உடலின் நோய் எதிர்ப்பு முறையை வலுப்படுத்தி தொற்றுகளை தடுக்கிறது.

* மூளைச் செயல்பாடு

நரம்பியல் கடவுச்சொற்கள் (Neurotransmitters) மற்றும் ஹார்மோன்கள் புரதத்தின் மேல் சார்ந்துள்ளன. இதனால் மன கவனம், நினைவாற்றல் மேம்படுகிறது.

* வேகமான குணமடைதல்

காயம், நோய் ஆகியவற்றிலிருந்து விரைவில் மீள உதவுகிறது.

கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு Vs புரதம்

கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு = எரிபொருள். அவை உடலை இயங்கச் செய்வதற்கான சக்தி தரும். ஆனால் சேவை (service) செய்யும் பணி புரதத்துக்கே.

டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறுவதாவது: “ஒரு வாகனம் எரிபொருள் இருந்தாலே ஓடும். ஆனால் அதை சீரமைக்க, பராமரிக்க சேவை அவசியம். அதுபோல் உடலுக்கான சேவை புரதம் தான்.”

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS.,DNB,MCh Ortho, DABRM (USA) (@drsanthoshjacobacademy)

புரதம் குறைந்தால் என்ன ஆகும்?

* உடலில் புரதம் சேமிக்க தனி இடமில்லை.

* போதுமான புரதம் இல்லையெனில், உடல் தசைகள் மற்றும் எலும்புகளில் இருந்து தேவையை எடுத்து கொள்கிறது.

* இது நீண்ட காலத்தில் தசைச் சிதைவு, எலும்பு அடர்த்தி குறைவு, உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

புரதத்தை தினசரி உணவில் சேர்க்கவும்

* உணவில் வெறும் கார்போஹைட்ரேட், கொழுப்பை மட்டும் நிரப்பாதீர்கள்.

* புரதத்தை போதுமான அளவில் சேர்ப்பதன் மூலம் தான் உடல் முழுமையாக ஆரோக்கியமாக இருக்கும்.

* முட்டை, பால், பருப்பு வகைகள், பட்டாணி, சுண்டல், பாதாம், மீன், கோழி போன்றவற்றில் அதிகளவில் புரதம் கிடைக்கிறது.

இறுதியாக..

உடலை இயக்க எரிபொருள் அவசியம். ஆனால் பராமரிக்க புரதம் தவிர்க்க முடியாத ஒன்று. டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் கூறும் போல, ஒவ்வொரு உணவிலும் சிறிய அளவு புரதம் இருந்தாலே உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும், தசை மற்றும் எலும்பு ஆரோக்கியமும் நிலைத்து நிற்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது மருத்துவ ஆலோசனையின் மாற்றாக கருதப்படக்கூடாது. உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

 

Read Next

பழங்களில் ஒட்டும் ஸ்டிக்கர் – சின்னதா தோன்றினாலும் ஆரோக்கியத்துக்கு பெரிய ஆபத்து! மருத்துவர் எச்சரிக்கை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 03, 2025 09:35 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content