Doctor Verified

எடை அதிகரிக்க முடியவில்லையா? மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் புத்திசாலித்தனமான வழிகள்!

உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்காக டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் வழங்கிய முக்கிய ஆலோசனைகள். எடை வேகமாக அல்ல, புத்திசாலித்தனமாக அதிகரிப்பது எப்படி, எந்த உணவுகள் உதவும், எவ்வளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
எடை அதிகரிக்க முடியவில்லையா? மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் புத்திசாலித்தனமான வழிகள்!


உடல் எடை குறைவாக இருப்பது பலருக்கும் மனஅழுத்தமாக மாறிவிடுகிறது. பலரும் வேகமாக எடையை அதிகரிக்க முயற்சி செய்வது வழக்கம். ஆனால் அதுவே உடல் நலனுக்கு ஆபத்தானதாக மாறலாம் என முக்கிய எலும்பியல் நிபுணர் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் எச்சரித்துள்ளார். அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், “Gain smart, not fast” என்ற வாசகத்துடன் எடை அதிகரிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

புத்திசாலித்தனமாக எடையை அதிகரிக்கவும் – வேகமாக அல்ல

“ஒரு மாதத்தில் 0.5 முதல் 1 கிலோ வரை மட்டுமே எடையை அதிகரிக்க முயலுங்கள்,” என டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறுகிறார். அதற்கு மேலான எடை அதிகரிப்பு பெரும்பாலும் கொழுப்பாக (fat) மாறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறைவான எடை இருக்கிறவர்கள் அவசரப்படாமல், மெதுவாக ஆரோக்கியமான முறையில் எடை சேர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இப்படி செய்தால் 30 நாளில் உடல் எடையை குறைக்கலாம்.! மருத்துவர் விளக்கம்..

கலோரிகளை குடித்தே சேர்த்துக்கொள்ளுங்கள்

எடை சேர்க்க நினைப்பவர்கள் மில்க் ஷேக் மற்றும் ஸ்மூத்தி போன்ற கலோரி நிறைந்த பானங்களை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் உடல் எடைக்கு ஏற்ப 1.6 முதல் 2 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 3 முதல் 4 முறை strength training செய்ய வேண்டும். சிறிய அளவில், ஆனால் அடிக்கடி உணவு எடுத்துக்கொள்வது முக்கியம். போதுமான தூக்கம் எடை சேர்க்க முக்கிய பங்கு வகிக்கிறது.

எடை அல்ல, உடல் அமைப்பை கவனியுங்கள்

“Body composition தான் முக்கியம். எடை அல்ல,” என டாக்டர் சந்தோஷ் கூறுகிறார். மனித உடல் மஸில், எலும்பு, மற்றும் உள் உறுப்பு திசுக்கள் ஆகியவற்றால் அமைந்தது. இவற்றின் வலிமையே உடல் நலனின் அடிப்படை. சிலர் குறைவான எடையுடன் இருந்தாலும், அவர்களின் மஸில் அளவு நன்றாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பல நேரங்களில் அதிக எடையுள்ளவர்களைவிட ஆரோக்கியமாக இருப்பார்கள்.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

எடைக்காக மனஅழுத்தப்பட வேண்டாம்

“மருத்துவர் கூறாமல் அல்லது உங்கள் உடல் தேவைக்கேற்ப இல்லாமல் எடையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டாம்,” என அவர் எச்சரிக்கிறார். அதற்குப் பதிலாக உங்கள் படிப்பு, தொழில், குடும்பம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். தினசரி தேவையான புரத அளவை எடுத்துக்கொண்டு வந்தால், குறைவான எடையுடன் இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இறுதியாக..

எடை குறைவாக இருப்பது ஒரு பிரச்சனை அல்ல, அதை சரியான வழியில் சமநிலைப்படுத்துவது தான் முக்கியம். வேகமாக எடை அதிகரிப்பதற்குப் பதிலாக, டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் போல “smart gain” முறையில் செல்லுங்கள். சீரான உணவு, போதுமான புரதம், உடற்பயிற்சி மற்றும் தூக்கம் — இந்த நான்கு அம்சங்களும் இருந்தால், ஆரோக்கியமான எடை உங்கள் வசம் வரும்.

Disclaimer: இக்கட்டுரை பொது சுகாதார விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் அவர்களின் சமூக ஊடகப் பதிவின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. உங்கள் உடல் நிலை, வயது, மற்றும் மருத்துவ தேவைக்கு ஏற்ப உணவு அல்லது உடற்பயிற்சி மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Read Next

இப்படி செய்தால் 30 நாளில் உடல் எடையை குறைக்கலாம்.! மருத்துவர் விளக்கம்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 30, 2025 10:44 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்