Doctor Verified

குழந்தைகளுக்கு ORSL கொடுக்கலாமா? – டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் எச்சரிக்கை!

பல பெற்றோர்கள் ORS மற்றும் ORSL இரண்டும் ஒன்றே என்று நினைத்து குழந்தைகளுக்கு தவறாக கொடுக்கிறார்கள். ஆனால், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறுவது — ORSL குழந்தைகளுக்கு ஆபத்தானது! ORSL எவ்வாறு டயேரியாவை மோசமாக்குகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
குழந்தைகளுக்கு ORSL கொடுக்கலாமா? – டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் எச்சரிக்கை!


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 குழந்தைகள் வரை வயிற்றுப்போக்கு (Diarrhea) காரணமாக உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 5 வயதிற்குக் குறைவான குழந்தைகளில் சுமார் 7% குழந்தைகள் ஒவ்வொரு இரண்டு வாரத்திலும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு “ORS” கொடுக்கிறார்கள். ஆனால், பலர் உண்மையான ORS மற்றும் சந்தையில் விற்கப்படும் “ORSL” இடையேயான வித்தியாசத்தை அறியாமல் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனைப்பற்றி பிரபல ஆர்த்தோபெடிக் சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியமான விளக்கத்தை பகிர்ந்துள்ளார்.

உண்மையான ORS என்ன செய்கிறது?

உலக சுகாதார அமைப்பான (WHO) அங்கீகரித்த ORS ஒரு மருத்துவ ரீதியான சமநிலை கொண்ட கலவை. இதில்

* சோடியம் (Sodium)

* பொட்டாசியம் (Potassium)

* குளோரைடு (Chloride)

* சிட்ரேட் (Citrate)

* குளுக்கோஸ் (Glucose)

ஆகியவை அறிவியல் விகிதத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்த கலவை உடலில் நீரிழப்பை சரிசெய்யும், எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கும், மேலும் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை உடனடியாக சரிசெய்யும் திறன் கொண்டது. WHO ORS பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி வருகிறது என்று மருத்துவ உலகம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.

ORSL-ல் என்ன பிரச்சனை?

டாக்டர் சந்தோஷ் ஜேக்கப்பின் கூற்றுப்படி, சந்தையில் விற்கப்படும் “ORSL” என்ற பொருள் WHO அங்கீகரித்தது அல்ல. அதன் கலவை மருத்துவ விகிதத்திற்குப் பொருந்தாது. அதில் அதிக அளவு சர்க்கரை (High Sugar Content) உள்ளது.

இதனால் குடிக்கும் போது ருசியாக இருக்கும் ஆனால், அது நீரிழப்பை அதிகரிக்கச் செய்கிறது! சர்க்கரை அதிகமாக இருப்பதால், அது குடல் நீர்ச்சத்தை மேலும் இழக்கச் செய்யும். இதனால், குழந்தைகளில் இருக்கும் வயிற்றுப்போக்கு (Diarrhea) மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது.

டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் எச்சரிக்கை

“பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருங்கள். உங்கள் மருத்துவர் ‘ORS’ என்றால், கடைக்குச் சென்று ‘ORSL’ வாங்க வேண்டாம். இரண்டும் ஒரே மாதிரி அல்ல,” என்று டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.

“ORSL குழந்தைகளுக்கு நீரிழப்பை அதிகரித்து, ஜீரண பிரச்சனைகளை மோசமாக்கும் அபாயம் உள்ளது. இதை உடனே நிறுத்தி, உண்மையான WHO அங்கீகரித்த ORS மட்டுமே பயன்படுத்துங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

* லேபிள் சரிபார்க்கவும். பாக்கெட்டில் “WHO Recommended Formula” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள்.

* “ORSL” என்ற பெயர் வந்தால் உடனே தவிர்க்கவும்.

* வீட்டிலேயே தயாரிக்கலாம்: ஒரு லிட்டர் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு + 6 டீஸ்பூன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம் (மருத்துவர் ஆலோசனையுடன்).

* மருத்துவர் பரிந்துரைத்த ORS பாகெட்டுகளையே பயன்படுத்தவும்.

இறுதியாக..

ORS மற்றும் ORSL இரண்டும் ஒரே மாதிரி என பல பெற்றோர்கள் தவறாக நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், ORSL குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அதில் இருக்கும் அதிக சர்க்கரை நீரிழப்பை அதிகரிக்கும். எனவே, மருத்துவர் பரிந்துரைத்த WHO-approved ORS மட்டுமே பயன்படுத்துவது மிக அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை, பொது தளத்தில் வெளியிடப்பட்ட டாக்டர் சந்தோஷ் ஜேக்கப்பின் மருத்துவ விளக்கங்களையும், நம்பகமான மருத்துவ ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. உங்கள் குழந்தைக்கு எந்தவொரு மருந்து அல்லது சத்து கலவை கொடுக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. டீனேஜர்களுக்கும் தடுப்பூசி அவசியம்! மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 29, 2025 19:42 IST

    Published By : Ishvarya Gurumurthy