Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Doctor Verified

குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. டீனேஜர்களுக்கும் தடுப்பூசி அவசியம்! மருத்துவர் தரும் விளக்கம்

பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதிலேயே முழு அக்கறை செலுத்துகின்றனர். ஆனால், அவர்கள் பெரும்பாலும் டீனேஜர்களுக்கு தடுப்பூசி போடுவதை புறக்கணிக்கின்றனர். இதில், டீனேஜர்களுக்கான முக்கியமான தடுப்பூசிகள் பற்றிய தகவல்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இளமைப் பருவம் என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படக்கூடிய ஒரு காலமாகும். எனவே, இந்த காலகட்டத்தில் அவர்களைப் பராமரிப்பதும், புரிந்துகொள்வதும் மிக முக்கியமாகும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது சமமாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், 10 முதல் 16 வயது வரையிலான டீனேஜர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது அவசியமாகும். இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

எனவே, நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க தடுப்பூசி மிக முக்கியமானதாகும். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை உறுதி செய்தாலும், டீனேஜர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அவர்கள் பெரும்பாலும் அதே கவனம் செலுத்துவதில்லை. இந்த நேரத்தில் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் பல கடுமையான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்றாலும், அவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகளைத் தவறவிடுகின்றனர்.

இதில், குர்கானில் உள்ள கிளவுட்னைன் குழும மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் சேத்னா ஜெயின் அவர்கள் டீனேஜர்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலில் வீக்கம் ஹெபடைடிஸின் அறிகுறியாக இருக்கலாம்.. அதைத் தடுப்பதற்கான பயனுள்ள வழிகள் இங்கே..

டீனேஜர்களுக்கான முக்கியமான தடுப்பூசிகள்

HPV தடுப்பூசி

டாக்டர் சேதனா அவர்களின் கூற்றுப்படி, “இந்த தடுப்பூசி பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) ஆகும். இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் இந்த நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கலாம்.

ஒரு பெண் 9 முதல் 14 வயதுக்குட்பட்டவராக இருப்பின், இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. பின்னர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கும் HPV தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொண்டை அல்லது ஆசனவாய் புற்றுநோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. எனவே, ஆண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் - டிடிஏபி

டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் ஆபத்தானவையாக மருத்துவர் சேத்னா கூறுகிறார். குறிப்பாக, பெர்டுசிஸ், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. டீனேஜர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டால், தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த தடுப்பூசி 11 முதல் 12 வயது வரை வழங்கப்படுகிறது.

மெனிங்கோகோகல் தடுப்பூசி

டாக்டர் சேத்னா அவர்களின் கூற்றுப்படி, "பொதுவாக டீனேஜர்கள் நெரிசலான இடங்களை விரும்புகின்றனர். இந்த சூழ்நிலையில், அவர்கள் மூளைக்காய்ச்சல் தடுப்பூசியைப் பெறுவது மிகவும் முக்கியமாகும். இந்த நோய் அதிக காய்ச்சல் மற்றும் தலைவலியை ஏற்படுத்துகிறது. இது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை கடுமையாக பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது ஆபத்தானதாக மாறலாம். இந்த தடுப்பூசி 11 முதல் 12 வயது வரை வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 16 வயதில் பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது" என்று மருத்துவர் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சலா.? கவலைப்பட வேண்டாம்.. மருத்துவர் விளக்கம்..

ஹெபடைடிஸ் ஏ & பி

டாக்டர் சேதனாவின் கூற்றுப்படி, டீனேஜர்களுக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி தடுப்பூசிகள் இரண்டும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஹெபடைடிஸ் ஏ மாசுபட்ட நீர் மற்றும் உணவு மூலம் பரவுகிறது. மேலும் டீனேஜர்கள் அதிகமாக வெளியே சாப்பிடுகின்றனர். ஹெபடைடிஸ் பி ஆனது பாதிக்கப்பட்ட ஊசிகள், பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது பாதிக்கப்பட்ட இரத்தம் மூலம் பரவுகிறது. இரண்டு நோய்களும் கல்லீரலைப் பாதிக்கிறது. இளம் வயதிலேயே தடுப்பூசி போடவில்லை எனில், மருத்துவரை அணுகி உங்கள் டீனேஜ் வயதிலேயே தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி

"இந்தியாவில் மழைக்காலம் முதல் கோடை மற்றும் குளிர்காலம் வரை மாறிவரும் வானிலையைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் தடுப்பூசி போடுவது நன்மை பயக்கும். மாறிவரும் வானிலையுடன், ஒரு சாதாரண சளி எப்போது காய்ச்சலாக மாறும் என்பதைக் கூறுவது கடினமாகும் குறிப்பாக ஆஸ்துமா அல்லது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகளுக்கு, காய்ச்சல் தடுப்பூசி கடுமையான தொற்றுநோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும்" என்று மருத்துவர் சேத்னா விளக்குகிறார்.

முடிவுரை

டீனேஜர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் எதிர்கால நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கலாம். எனவே, பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதை உறுதிசெய்து, அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், மருத்துவரை அணுகி அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறலாம். ஏனெனில் குழந்தையின் ஆரோக்கியத்தையும், எதிர்கால நோய்களையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Rabies-ல இருந்து உங்களை பாதுகாக்க இதை பண்ணுங்க.. மருத்துவர் பரிந்துரை..

Image Source: Freepik

Read Next

வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா.? நிபுணர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 26, 2025 21:31 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content