குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் வந்தால் பெற்றோர் அச்சப்பட வேண்டியதில்லை என்று குழந்தை மருத்துவர் ஹரிணி ஸ்ரீ கூறுகிறார். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகச் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி என அவர் கூறினார்.
குழந்தை மருத்துவர் ஹரிணி ஸ்ரீ கூறுகையில், “பொதுவாக தடுப்பூசி போட்ட 12 மணி நேரத்துக்குள் சிறிய அளவிலான காய்ச்சல் ஏற்படும். இது உடல் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இயல்பான செயல்முறையாகும். அதனால் பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை” என்றார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் அவசியம்?
* ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாப்பு – சளி, போலியோ, காச நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை தடுக்கும்.
* சிறு வயதில் நோய் எதிர்ப்பு சக்தி – நோய் வராமல், உடல் எதிர்ப்பு சக்தியை சிறுவயதிலேயே வளர்க்கிறது.
* பெரிய பின்விளைவுகளைத் தடுக்கும் – மூளை சேதம், கேட்க்கும் திறன் இழப்பு போன்ற ஆபத்துகளிலிருந்து காக்கிறது.
* சமூக பாதுகாப்பு – தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்து, சமூகத்தையும் பாதுகாக்கிறது.
* பாதுகாப்பான வழி – குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்க தடுப்பூசி மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெற்றோருக்கான அறிவுரை
குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு அழுகை, சோர்வு, அல்லது சிறிய காய்ச்சல் வருவது முற்றிலும் இயல்பானது. அதனால் தடுப்பூசியை தவிர்க்காமல், பிறப்பு முதல் 5 வயது வரை உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் பெற்றோர் கட்டாயம் போட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
View this post on Instagram
இறுதியாக..
தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு காய்ச்சல் வருவது ஆரோக்கியமான அறிகுறியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தி சரியாகச் செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி. பெற்றோர் அச்சப்படாமல் குழந்தைக்கு அனைத்து தடுப்பூசிகளையும் தவறாமல் போடுவது மிக அவசியம் என்று மருத்துவர் கூறினார்.