Causes of Fever: மழைக்காலத்தில் மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது வழக்கம். வெயில் கால வெப்பத்தில் இருந்து விடுதலை வழங்கும் வகையில் மழைக்காலம் இருந்தாலும், இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மழைக்காலத்தில் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மழைக்காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பு என பலர் நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு காரணம் உண்டு.
முக்கிய கட்டுரைகள்
மழைக்காலத்தில் காய்ச்சலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பருவமழை காலத்தில் பலருக்கு காய்ச்சல் பிரச்சனை அதிகரிக்கிறது. இதற்கு காரணம், வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றமும், இந்த காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கிறது. காய்ச்சல் பெரும்பாலும் நுண்ணுயிர் தொற்றுகளின் பொதுவான அறிகுறியாக இருப்பதால், மழைக்காலத்தில் நாம் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுகிறோம்.
மழைக்காலத்தில் காய்ச்சல் ஏற்படுவது பொதுவல்ல, சில காய்ச்சல் சாதாரணமாக சரியாகிவிடும். சில காய்ச்சல் உடல்நலத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே காய்ச்சலின் அறிகுறியையும் அறிந்துக் கொண்டு அதற்கேற்ப வைத்தியத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
காய்ச்சல் என்றால் என்ன?
காய்ச்சல் என்பது மக்களிடையே ஏற்படும் மிகவும் பொதுவான சுகாதார நிலைகளில் ஒன்றாகும். பொதுவாக காய்ச்சல் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினை காரணமாக ஏற்படும். உடலின் சில தீவிர நோய்களாலும் உங்களுக்கு காய்ச்சல் வரலாம்.
நமது உடலின் சாதாரண வெப்பநிலை சுமார் 97 டிகிரி பாரன்ஹீட் முதல் 99 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதைவிட அதிகமாக இருந்தால் அது காய்ச்சலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நபரின் உடல்நிலையைப் பொறுத்து வெப்பநிலை மாறுபடலாம்.
வானிலை மாற்றங்களால் உடல் வெப்பநிலையும் மாறுகிறது. ஆனால் உங்கள் உடல் வெப்பநிலை தொடர்ந்து 100.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருந்தால், அது காய்ச்சலாகக் கருதப்படுகிறது. காய்ச்சல் எந்த வகையான நோயும் அல்ல, பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு உடல் கடினமாக உழைக்கும்போது, அதற்கு பதில் வெப்பநிலை உயர்கிறது. காய்ச்சலை மருத்துவ மொழியில் ஹைபர்தர்மியா மற்றும் பைரெக்ஸியா என்றும் அழைக்கப்படுகிறது.
காய்ச்சல் எத்தனை வகை?
குறைந்த தர காய்ச்சல் - 100 முதல் 101 டிகிரி பாரன்ஹீட் வரையிலான காய்ச்சல் குறைந்த தர காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
உயர் தர காய்ச்சல் - காய்ச்சல் 103 முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தால், அது உயர் தர காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
ஆபத்தான காய்ச்சல் - ஆபத்தான கிரேடு காய்ச்சலில், உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாக இருக்கும்.
முறையான சிகிச்சை அவசியம்
மழைக்காலத்தில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே மக்கள் தங்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதும் காய்ச்சல் வந்தால் முறையான சிகிச்சை பெற வேண்டியதும் மிக அவசியம்.
Image Source: FreePik