பன்றிக்காய்ச்சலால் அதிகரித்து வரும் மரணம்! அதன் காரணங்கள், தடுப்பு முறைகளைத் தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
பன்றிக்காய்ச்சலால் அதிகரித்து வரும் மரணம்! அதன் காரணங்கள், தடுப்பு முறைகளைத் தெரிஞ்சிக்கோங்க


தேசிய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவர அறிக்கையில் ஜூன் மாதம் வரை 7,215 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப்பில் 41 பேரும், குஜராத்தில் 26 மற்றும் மகாராஷ்டிராவில் 16 பேர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சலுக்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Influenza Flu Preventions: மக்களே உஷார்.! பயமுறுத்தும் இன்புளூயன்சா ப்ளூ.!

பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்

மனிதர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் உருவாவதற்கு 'எச்-1-என்-1' வகை இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸே காரணமாகும். இந்த H1N1 வைரஸ் பொதுவான காய்ச்சல் வைரஸ் போல பரவுகிறது. இதில் ஒருவரின் தும்மல் அல்லது இருமலின் போது வெளியிடப்படும் சிறிய நீர்த்துளிகள் காற்றில் சிறிது நேரம் பரவும் போது, அந்தத் துளிகளிலிருந்து வெளியாகக் கூடிய வைரஸ்கள் கடினமான மேற்பரப்பில் இறங்குகிறது.

அதன் பின் இந்த பாதிக்கப்பட்ட நீர்த்துளிகளை சுவாசிப்பதால் அல்லது இந்த பாதிக்கப்பட்ட மேற்பரப்பைத் தொடுவதால் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்படுகிறது. எனினும், பெரும்பாலானவர்களுக்கு இந்த புதிய வைரஸுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, நோயெதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள் இந்த H1N1 வைரஸூடன் தொடர்பு கொள்ளும் போது, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் ஏற்படுகிறது.

பன்றிக்காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?

பொதுவான பன்றிக்காய்ச்சல் வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக்கூடிய தொற்றுநோயாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக விரைவாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதில் யாராவது இருமல் அல்லது தும்மும்போது, பரவக்கூடிய நீர்த்துளிகளில் இந்த வைரஸ்கள் வெளியாகலாம். இது கடினமான மேற்பரப்பில் இறங்குவதுடன், 24 மணி நேரம் உயிர்வாழக்கூடியதாகும். இந்த பாதிக்கப்பட்ட நீர்த்துளிகளை சுவாசிப்பவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இந்த நீர்த்துளிகள் காற்றில் சிறிது நேரம் பரவி பிறகு ஒரு மேற்பரப்பில் குடியேறுகிறது. இந்த பாதிக்கப்பட்ட நீர்த்துளிகளை சுவாசிப்பது எந்த மனிதனையும் பாதிக்கக் கூடியதாக அமைகிறது. இது தவிர நாம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருள்களான தலையணைகள், கணினி விசைப்பலகைகள், ரிமோட் கண்ட்ரோல்கள், கதவு கைப்பிடி உள்ளிட்டவற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஒரு நபர் இந்த மேற்பரப்புகளைத் தொடுவதுடன், பாதிக்கப்பட்ட கைகளை அவர்களது மூக்கு அல்லது வாயில் வைப்பதால் அவர்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிப்படையும் சூழல் ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Flu Fever Prevention: பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் முறைகள்

உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவுதலிலிருந்து விடுதலை பெற முடியும். இதில் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதைக் காணலாம்.

  • பன்றிக் காய்ச்சலைத் தவிர்ப்பதற்கு, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கையாள்வது மிகவும் அவசியமாகும். அதன் படி, துத்தநாகம் போன்ற அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்.
  • பன்றிக்காய்ச்சலைத் தவிர்க்க நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இவ்வாறு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் பன்றிக் காய்ச்சலை எதிர்த்துப் போராடும் செல்களைப் பரப்பி, உடலில் என்டோர்பின்களை வெளியேற்றுகிறது.
  • பன்றிக் காய்ச்சலிலிருந்து விடுபட ப்ரோபயாடிக்குகள் நிறைந்த உணவை உட்கொள்வது அவசியமாகும். இந்த புரோபயாடிக்குகள் பன்றிக் காய்ச்சல் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • மேலும், பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கவும், உடலின் சீரான செயல்பாட்டிற்கும் குறைந்தது 7 மணிநேர தூக்கம் மிகவும் அவசியமாகும். ஏனெனில், சரியான தூக்கமில்லாததால் உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. இந்த அதிகரித்த மன அழுத்தம் நோயெதிப்புச் சக்தியை மோசமாக்கலாம்.
  • இது தவிர, பன்றிக் காய்ச்சல் பரவுதலைத் தடுக்கும் வகையில் எந்த வகையான அசுத்தமும் இல்லாமல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இதன் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்கலாம்.

இவை அனைத்தும் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவுதலைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Flu: அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிவோம் வாருங்கள்

Image Source: Freepik

Read Next

Nayanthara Hibiscus Tea Controversy: லேடி சூப்பர் ஸ்டாரின் செம்பருத்தி டீ விவகாரம்.. மருத்துவர் கொந்தளிப்பு.. டெலிட் செய்த நயன்தாரா..

Disclaimer