How To Prevent Child From Zika Virus: மழைக்காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இந்த காலகட்டத்திலேயே பலரும் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அரிதான வெப்பமண்டல நோயாக கருதப்படுவது ஜியா வைரஸ் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதென்ன ஜிகா வைரஸ், இது எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன உள்ளது? இது குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஜிகா வைரஸ் என்றால் என்ன?
ஜியா என்பது கொசு கடித்தால் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்று நோயைக் குறிக்கிறது. பெரும்பாலான மக்களின் இந்த வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் லேசானவையே. எனினும், கர்ப்பிணி பெண்களின் பிறக்காத குழந்தைகளுக்கே பெரும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ கிடையாது. இதனைத் தடுக்க பெரும்பாலும் கொசு கடிப்பதை நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: AC Sleeping Tips: குழந்தையை ஏசியில் தூங்க வைக்கும் முன் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!
ஜிகா வைரஸ் தொற்று பரவல்
இது கொசுக்களால் பரவக்கூடிய நோயாகும். இது முதன்முதலாக 1947 ஆம் ஆண்டில் உகாண்டாவின் ஜிகா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது ஒரு அரிய வெப்பமண்டல நோயாகவே கருதப்படுகிறது.
ஆனால், தற்போது ஆசியா, அமெரிக்கா, பசிபிக் நாடுகள், பிரெஞ்சு பாலினேசி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் என பல இடங்களில் ஜிகா வைரஸ் பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
ஜிகா வைரஸின் கண்டுபிடிப்புகள்
இதில் முதலாவதாக பெரும்பாலானோர் தலைவலி, காய்ச்சல் மற்றும் மூட்டு வலி போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பினும் ஜிகா தொற்று குய்லின்-பார்ரே நோய்க்குறியையும் ஏற்படுத்தலாம். இது பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு அரிய நிலையாகும்.
இரண்டாவது கண்டுபிடிப்பு மிகவும் கவலைக்குரியதாகும். இது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் பிறக்காத குழந்தைகளின் மீதும் கண்டறியப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Baby Wipes: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எந்த வகை வைப்ஸ் பெஸ்ட்!
ஜிகா வைரஸ் எவ்வாறு பரவுகிறது மற்றும் அதன் பாதிப்புகள்
2015 முதல் 2016 வரையிலான தொற்றுநோய் பரவலின் போது, கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து கருவுக்கு ஜிகா பரவுவதாகக் கண்டறியப்பட்டது. அதன் படி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 5 முதல் 42% குழந்தைகளுக்கு பாதகமான விளைவைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மைக்ரோசெபாலி போன்ற பிறவி குறைபாடுகள் அடங்குகிறது. குழந்தைகள் மருத்துவ ரீதியாக சிறிய தலையுடன் பிறப்பார்கள் மற்றும் நிரந்தர மூளை பாதிப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும் இதன் மற்ற கடுமையான பிரச்சனையாக முன்கூட்டிய பிறப்பு, கரு இழப்பு போன்றவை ஏற்படலாம்.
ஜிகா வைரஸ் பரவுவது டெங்கு, சிக்கன் குன்யா மற்றும் மஞ்சள் காய்ச்சலை பரப்பும் அதே கொசுக்களால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் மூலம் பரவுகிறது. கூடுதலாக, இது இரத்த மாற்றம், உடலுறவு, மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பரவலாம்.
ஜிகா வைரஸ் தடுக்கும் மற்றும் சிகிச்சை முறைகள்
பிரேசிலில் இந்த தொற்றுநோய்களில் 2015-16-ல் பிறந்த குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். இதற்கு ஆராய்ச்சியில் ஆரம்ப கால குழந்தை பருவ மாதங்களில் பிசியோதெரபி செய்வது இந்த குறைபாட்டின் சில விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. எனினும், தற்போதைய மற்றும் எதிர்கால ஜியா நோய்த்தொற்றுகளின் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க எந்த சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை.
ஜிகாவைத் தடுக்க அதைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கடியைத் தவிர்க்க வேண்டும். எனவே உடலை மறைக்கக்கூடிய வெளிர்நிற ஆடைகள், பூச்சி விரட்டிகள், மற்றும் ஜன்னல் திரைகள் போன்றவற்றின் மூலம் ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதைத் தவிர்க்கலாம். இது தவிர, ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை நிறுத்துவதன் மூலம் தொற்று நோய் அபாயத்தைக் குறைக்க முடியும். கொசுக்கள் பரவுவதை உண்டாக்கும் காரணிகளைத் தடுப்பதன் மூலம் இந்த வகை நோய்த்தொற்றுக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Children Health: மறந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாத உணவுகள்..
Image Source: Freepik