Baby Wipes: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எந்த வகை வைப்ஸ் பெஸ்ட்!

  • SHARE
  • FOLLOW
Baby Wipes: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எந்த வகை வைப்ஸ் பெஸ்ட்!

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அதிக தூய்மை தேவை. தாய்ப்பால் கொடுத்தப் பிறகும் அவர்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இந்த காலக்கட்டத்தில் பொதுவாக குழந்தைகளை சுத்தம் செய்ய வைப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பல பெற்றோர்களை துடைப்பான் எனப்படும் வைப்ஸ்ஸை பயன்படுத்துவதில்லை.

இருப்பினும் பலர் துடைப்பான எனப்படும் வைப்ஸை பயன்படுத்துகின்றனர். இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் துடைப்பான்களை கவனம் செலுத்தாமல் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படலாம். இதற்கான சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு வைப்ஸ் ஏன் அவசியம்?

வைப்ஸ் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதை வாஷ் செய்ய வேண்டியதில்லை கிருமிகள் பரவாது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

புதிதாக பிறந்த குழந்தைக்கு கிருமி எதிர்ப்புடன் கூடிய வைப்ஸ் மிக பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தையின் உடலில் உள்ள அழுக்கை முற்றிலும் போக்க இது உதவும்.

குழந்தையின் தோல் உணர்திறன் கொண்டதாக இருந்தால், சோப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வைப்ஸ் பயன்படுத்தலாம். இது தொற்று பரவாமல் தடுக்க உதவும்.

புதிதாக பிறந்த குழந்தைக்கு எந்தவகை வைப்ஸ் பெஸ்ட்?

பிறந்த குழந்தைக்கு ஹைபோஅலர்கெனிக்கான துடைப்பான்களைத் தேர்ந்தெடுக்கவும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, pH சமநிலையுடன் இருக்கும் வைப்ஸை தேர்ந்தெடுக்கவும். இத்தகைய வைப்ஸ் சருமத்தின் இயற்கையான அமிலத்தன்மையை பராமரிக்கின்றன.

அதிக இயற்கை பொருட்கள் கொண்ட வைப்ஸ்களை தேர்வு செய்யவும்.

கற்றாழை மற்றும் கெமோமில் போன்ற பொருட்களைக் கொண்டிருக்கும் வைப்ஸ்களை தேர்ந்தெடுக்கவும். இது குழந்தைகளின் தோலுக்கு நன்மை பயக்கும்.

வைப்ஸ்களை வாங்குவதற்கு முன் ஆன்லைனில் மதிப்புரைகளை சரிபார்க்கவும். நல்ல மதிப்புரைகள் கொண்ட வைப்ஸ்களை வாங்கவும்.

அதிக சந்தேகம் இருக்கும்பட்சத்தில் வைப்ஸ்களை தேர்வு செய்வதற்கு முன் குழந்தை நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Image Source: FreePik

Read Next

Mobile Addiction: குழந்தைங்க அதிகமா ஃபோன் பாக்குறாங்களா.? அப்போ இதை செய்யுங்க…

Disclaimer

குறிச்சொற்கள்