Sunlight Benefits: புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியம் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sunlight Benefits: புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியம் தெரியுமா?


Why Sunlight Is Important For Newborn Baby: பழங்காலம் முதலே பிறந்த குழந்தைகளை சிறிது நேரம் சூரிய ஒளியை வைக்குமாறு அறுவுறுத்தப்படுவர். சூரிய ஒளி வெப்பத்தை மட்டுமல்லாமல், உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறத். எனினும், பலர் சூரிய ஒளியில் குழந்தையை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என நினைக்கின்றனர். ஆனால், இது அப்படி இல்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குழந்தையை சூரிய ஒளியில் அழைத்துச் செல்வது குழந்தைக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் குழந்தையை சூரிய ஒளியில் எடுத்துச் செல்வது சிறப்பான நன்மைகளைத் தருகிறது.

புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்கால சூரிய ஒளி ஏன் முக்கியம்?

குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு சூரிய ஒளி மிகவும் பயனுள்ளதாக அமையும். சூரிய ஒளியின் வெளிப்பாடு உடலை பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கிறது. சூரிய வெப்பம் உடலில் ஆற்றலைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க

அதன் படி, குழந்தையை சூரிய ஒளியின் முன்பு காலை 9 மணி முதல் 11 மணி வரை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், மதிய வெயிலில் குழந்தைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், குழந்தைகளை வெயிலில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கலாம். இதை விட அதிக நேரம் குழந்தையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு குளிர்கால சூரிய ஒளி தருவதன் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

பிறந்த குழந்தைக்கு குளிர்கால சூரிய ஒளி தரும் நன்மைகள்

புதிதாகப் பிறந்த குழந்தையை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

மூளை வளர்ச்சிக்கு

புதிதாக பிறந்த குழந்தையின் மூளைக்கு, குளிர்கால சூரிய ஒளி மிகுந்த நன்மை தரும். இது மூளையில் செரோடோனெர்ஜிக் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும், உடலில் உள்ள செரோடோனின் ஹார்மோன் மனநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. குழந்தையை சூரிய ஒளியில் எடுத்துச் செல்வது செரோடோனின் சரியான அளவைப் பராமரிக்கிறது.

எலும்பு நன்மைக்கு

சிறிது நேரம் புதிதாகப் பிறந்த குழந்தையை வெயிலில் வைத்து எடுப்பது, எலும்புகளுக்கு நன்மை தருவதாக அமைகிறது. ஏனெனில், சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இது உடலில் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. பொதுவாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். இந்த சூழ்நிலையில் நாள் முழுவதும் சிறிது நேரம் சூரிய ஒளியில் குழந்தைகளை வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கோடை அல்லது குளிர் காலம்.. எந்த காலத்திலும் குழந்தைக்கு நன்மை தரும் ஆலிவ் ஆயில் மசாஜ்

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க

குழந்தையை சூரிய ஒளியில் எடுத்துச் செல்வது மஞ்சள் காமாலை அபாயத்தைக் குறைக்க உள்ளது. சூரிய ஒளி பிலிரூபினை உடைக்க உதவுகிறது. இவற்றின் அதிகரிப்பால், தோல் மஞ்சள் நிறமாக மாறும். சிறிது நேரம், சூரிய ஒளியில் குழந்தையை வெளியே எடுத்துச் செல்வது மஞ்சள் காமாலை அறிகுறியைக் குறைக்க உதவுகிறது. எனினும், குழந்தை நோய்வாய்ப்பட்டிருப்பின், மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே குழந்தையை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைக்கு குளிர்கால சூரிய ஒளியை வழங்கும் முறை

குழந்தைகளைப் பொறுத்த வரை, சிறு கவனக்குறைவும் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தையை வெயிலில் எடுத்துச் செல்லும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

  • குழந்தையை சூரிய ஒளியில் எடுத்துச் செல்லும் போது, தோல் சிவக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், குழந்தையின் தோல் மென்மையானதாகும்.
  • குழந்தையை வெயிலில் அழைத்துச் செல்லும் முன் தொப்பி அணிந்து கொள்ள வைக்கலாம். இது குழந்தையின் கண் மற்றும் முகத்தில் நேரடியாக சூரிய ஒளி படாமல் தடுக்க உதவுகிறது.
  • வெயிலின் காரணமாக, குழந்தைக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.
  • சூரிய ஒளியுடன், பலத்த காற்று வீசும் போது, குழந்தையை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம்.
  • புதிதாக பிறந்த குழந்தையை வெயிலில் அழைத்துச் சென்றால், வசதியான ஆடைகளை அணிய வைக்கலாம். ஏனெனில், குழந்தையின் தோல் மிகுந்த உணர்திறன் கொண்டிருப்பதால், நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Food Allergies In Children: குழந்தைக்கு உணவு அலர்ஜியைத் தரும் இந்த உணவுகளை மறந்தும் கொடுக்காதீங்க

Image Source: Freepik

Read Next

Baby Face Massage: குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் செய்ய போறீங்களா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க.

Disclaimer