Olive Oil Baby Massage Benefits: குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு எந்த மசாஜ் எண்ணெய் பயன்படுத்த வேண்டும், எந்த எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து பெற்றோர்கள் பலரும் கவலைப்படுகின்றனர். குழந்தையின் சருமத்தை மென்மையாக வைக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஊட்டமளிக்கும் எண்ணெய் மசாஜ் தேவையாகும். இதற்கு சிறந்த தீர்வாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆலிவ் எண்ணெய் தரும் பல்வேறு நன்மைகள் குறித்துக் காணலாம்.
குழந்தைகளுக்கு ஆலிவ் எண்ணெய் மசாஜ் தரும் நன்மைகள்
ஆலிவ் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. குழந்தைக்கு ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்யும் நன்மைகள் குறித்துக் காணலாம்.
எந்த பருவத்திலும் நன்மை தரும்
கோடை மற்றும் குளிர் காலத்தில் எந்த வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம் என்பதில் பலரும் குழப்பமடைகின்றனர். சில எண்ணெய்களை மசாஜ் செய்வது கோடை அல்லது குளிர் காலம் என வரையறுக்கப்பட்டிருப்பின், வேறு எந்த நேரத்திலும் பயன்படுத்துவது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். அதன் படி கோடை மற்றும் குளிர் காலத்தில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். எனினும், கோடையில் குறைந்த அளவு எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். குளிர் காலத்தில் சிறிது எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த நேரத்தில் தோல் வறண்டு போகும் வாய்ப்பு அதிகம்.
இந்த பதிவும் உதவலாம்: Baby Skin Care: குழந்தையின் சரும பராமரிப்புக்கு பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்
கிரேடில் கேப்
Cradle Cap என்பது ஒரு வகையான தோல் நிலையாகும். இதில் குழந்தையின் உச்சந்தலையில் உள்ள தோல் வறண்டு மற்றும் செதில்களாக மாறலாம். இது பொதுவாக குழந்தைக்கு அதிக பிரச்சனையை ஏற்படுத்தாது. ஆனால், உச்சந்தலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். Cradle Cap-களில் இருந்து உருவாகும் சிரங்குகளைத் தளர்த்த ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. குழந்தைகளின் தலையை ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து 15-20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின் லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவி பின் சீப்பைப் பயன்படுத்தி செதில்களை அகற்றலாம்.
நல்ல தூக்கத்திற்கு
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு குழந்தையின் உள்ளங்கால்களை நன்கு மசாஜ் செய்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு முடியை மென்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. மசாஜ் செய்யும் போது, குழந்தையின் தலைமுடியில் தடவி தலை மசாஜ் செய்யலாம்.
டயபர் தடிப்புகளை அகற்ற
குழந்தைகள் டயபர் அணியும் போது டயபர் சொறி பிரச்சனையை சந்திக்கலாம். இந்த சூழ்நிலையில், டயபர் சொறிகளுக்கு வீட்டு வைத்தியமாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயை குழந்தையின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, குழந்தையின் உடலில் வெடிப்புகள் உண்டாவதைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்
சருமத்தை ஈரப்பதமாக்க
குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். இதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நன்மைகளைத் தரும். ஆலிவ் எண்ணெயில் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்துள்ளதால், குழந்தைக்கு மசாஜ் செய்த பிறகு சருமம் மென்மையாக இருப்பதை உணரலாம். ஆலிவ் எண்ணெயில் உள்ள ஸ்க்வாலீன், ஒரு ஹைட்ரேட்டிங் ஏஜென்ட் ஆகும். இது சருமத்தை மென்மையாக வைப்பதுடன், ஊட்டச்சத்துகளை அளிக்க உதவுகிறது.
தற்காப்பு நடவடிக்கைகள்
ஆலிவ் எண்ணெய் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாக இருப்பினும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை இருப்பின், ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பிரச்சனையை அதிகரிக்கலாம்.
- குழந்தையின் மென்மையான சருமத்திற்கு கலப்படம் செய்யப்பட்ட ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஆலிவ் எண்ணெய் பயன்பாட்டிற்குப் பின், குழந்தையின் உடலில் சொறி ஏற்பட்டால், உடனே இந்த எண்ணெய் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க
Image Source: Freepik