Olive Oil in Winter: குளிர்காலத்தில் ஆலிவ் எண்ணெய் மூலம் கிடைக்கும் ரகசிய நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Olive Oil in Winter: குளிர்காலத்தில் ஆலிவ் எண்ணெய் மூலம் கிடைக்கும் ரகசிய நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக, அதன் தேவை அதிகமாக உள்ளது, இன்று ஆலிவ் எண்ணெயை உலகின் எந்தப் பகுதியிலும் எளிதாகக் காணலாம். உணவைத் தவிர, ஆலிவ் எண்ணெய் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: Winter Skin Care: குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாம் தடுக்க இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க

அதன்படி குளிர்காலத்தில் உடல் வலியில் இருந்து நிவாரணம் பெற ஆலிவ் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் வலிக்கு ஆலிவ் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? (How to use Olive Oil)

குளிர்காலத்தில் உடல் வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் இந்த பிரச்சனை வயதானவர்களுக்கு ஏற்படுகிறது, குளிர் காற்று காரணமாக வயதானவர்களுக்கு எளிதாக உடல் வலி ஏற்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி பயன்படுத்தலாம். உங்கள் உடலின் வலி உள்ள பகுதியில் வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெய் மசாஜ் உங்கள் தசைகளை தளர்த்தும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், இது உங்களுக்கு நிவாரணம் தரும்.

ஆலிவ் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலியில் இருந்து நிவாரணம் பெற, ஆலிவ் எண்ணெயில் பூண்டு கலந்து பூண்டு எண்ணெய் தயாரிக்கவும்.

இதைச் செய்ய, நீங்கள் 4 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் 3 பல் பூண்டுகளைச் சேர்த்து சூடு செய்ய வேம்டும். இதற்குப் பிறகு, பூண்டை எடுத்து அந்த எண்ணெயை வலி உள்ள பகுதிகளில் தடவவும்.

ஆலிவ் எண்ணெயுடன் பூண்டைப் பயன்படுத்துவது உடல் வலியைக் குறைக்க உதவும். ஆலிவ் எண்ணெயில் உள்ள பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: Anti Aging Drinks: 40 வயதிலும் 20 வயது பெண் போல இளமையா இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க!

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கும் மிக நல்லது. இது சருமம் வறண்டு போகவிடாமல் பாதுகாக்கும். காரணம் இந்த ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் இ, ஏ, இயற்கையான கொழுப்பு அமிலம் ஆகியவை அதிகமாக உள்ளது. இதை சருமத்தில் அப்ளை செய்யும்பட்சத்தில் இது சருமத்திற்கு நீர் சேர்த்து அளித்து அதன் பளபளப்பு தன்மை மற்றும் பொழிவை அதிகரிக்கும்.

Pic Courtesy: FreePik

Read Next

கொழு,கொழு கன்னம் வேணுமா?… இந்த 4 வழிகளை முயற்சித்துப் பாருங்கள்!

Disclaimer