Best Oil for Skin in Winter: குளிர்காலம் தொடங்கியதும் பலரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று சருமம் வறண்டு போகுதல் ஆகும். இதனால், தோல் வெடிக்க ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று, சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கிறது. இதனால், முகம் மிகவும் வறண்டு காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சருமத்தை மென்மையாக மற்றும் ஈரப்பதமாக வைத்திருக்க சிறிது எண்ணெயை முகத்தில் தடவலாம். இது சருமத்திற்கு நீண்ட நேரம் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன், பல்வேறு சருமப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் தருகிறது. இதில் குளிர்காலத்தில் சரும பராமரிப்புக்காக பயன்படுத்தக் கூடிய எண்ணெய்கள் குறித்து சுதா கிளினிக்கின் ஆயுர்வேத நிபுணர் பவன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்கள் (Oils for Skin in Winter)
குளிர்கால சரும பராமரிப்பிற்காக கீழே கொடுக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.
பாதாம் எண்ணெய்
இவை சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வறட்சி காரணமாக சருமத்தில் அரிப்பு உண்டாகலாம். இந்த சூழ்நிலையில், தேங்காய் எண்ணெயைத் தடவி வர, சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதுடன், மென்மையாக வைத்திருக்க உதவும். இது சருமத்தில் ஏற்படும் அழற்சியை நீக்கவும் உதவுகிறது.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் வைட்டமின் ஈ சத்துக்கள் காணப்படுகிறது. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளி மற்றும் காற்று மாசுபாட்டின் விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம். கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கடுகு எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
எள் எண்ணெய்
இதில் ஆன்டி செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை முன்கூட்டியே வயதாகும் காரணிகளைத் தடுக்கிறது. மேலும், இந்த எள் எண்ணெயில் அமினோ அமிலங்கள், லெசித்தின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை நிறைந்துள்ளன. எனவே இவை குளிர்காலத்தில் ஏற்படும் அரிப்பு, மற்றும் பிற பூஞ்சை தொற்றுக்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுவதுடன், தோல் நோய்த்தொற்றுக்கள் நீக்க உதவுகிறது. இதன் முக்கிய பயனாக, சருமத்தில் ஏற்படும் தோலழற்சி மற்றும் தோல் தொடர்பான இன்னும் பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயினை சருமத்திற்கு மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம். இது தவிர, க்ளென்சர், சன் ஸ்கிரீன் போன்றவையாகவும் பயன்படுத்தலாம். இதில் உள்ள லாரிக் கூறுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயினை சருமத்திற்கு பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
Image Source: Freepik