Olive Oil For Skin: முகம் பளிச்சினு தங்கம் போல மின்ன ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும்

  • SHARE
  • FOLLOW
Olive Oil For Skin: முகம் பளிச்சினு தங்கம் போல மின்ன ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும்


அந்த வகையில் சரும பராமரிப்புக்கு ஆலிவ் மரத்தின் விதையிலிருந்து பெறப்படும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை வழங்குவதுடன் முகத்தில் இருக்கக் கூடிய கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை எதிராகப் போராட உதவுகிறது. சரும பராமரிப்புக்கு ஆலிவ் ஆயில் தரும் நன்மைகள் மற்றும் எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்துக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Wrinkles Removing Tips: கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்க இந்த 3 பொருள்கள் போதும்.

சருமத்திற்கு ஆலிவ் ஆயில் தரும் நன்மைகள்

முகத்தைப் பொலிவாக்க ஆலிவ் எண்ணெய் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

  • ஆலிவ் எண்ணெயில் ஸ்குவாலின் மற்றும் ஒலிக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் தன்மையை பாதுகாக்க உதவுகிறது.
  • முகத்தில் தோன்றும் வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க இயற்கையான மருந்தாக ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. மேலும், இது முகத்தில் திரட்டப்பட்ட அசுத்தங்களை உறிஞ்சி துளைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
  • ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளதால் இவை இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதுடன், நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
  • ஆலிவ் எண்ணெயை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் வடுக்கள் போன்றவற்றை மறைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை கறையற்றதாக மாற்றுகிறது.
  • இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உள் அழற்சிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

சருமத்தைப் பொலிவாக்க ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது எப்படி

சருமத்தைப் பளபளப்பாக்கவும், பல்வேறு சரும பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆலிவ் ஆயில் உதவுகிறது. இதில் சருமத்திற்கு ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்துக் காண்போம்.

தேவையான பொருள்கள்

  • ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • வெந்நீர் - தேவையான அளவு
  • மென்மையான பருத்தி துணி

இந்த பதிவும் உதவலாம்: Dark Circles Face Pack: கருவளையங்கள் விரைவில் மறைய இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்க.

சருமத்திற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தும் முறை

  • சருமத்திற்கு ஆலிவ் எண்ணெயை விரலில் தொட்டு முகம் முழுவதும் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு கன்னங்கள், மூக்கு மற்றும் நெற்றிப் பகுதியில் நன்றாக மசாஜ் செய்யவும்.
  • இதற்கு மென்மையான பருத்தி துணியை வெந்நீரில் நனைத்து அதை அறைவெப்பநிலைக்கு வரும் வரை அந்த துணியைக் கொண்டு முகத்திற்கு எதிராக உறுதியாக அழுத்த வேண்டும்.
  • பின் துணியை அகற்றி சூடான நீரில் மீண்டும் சேர்த்து ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்திய இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு உலர வைக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வர சிறந்த பலன் கிடைக்கும். ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது வறண்ட சருமத்தை மென்மையாக மாற்றுவதுடன் சருமத்தை பளபளப்புடன் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ear Pimple Remedies: காது கொப்புளத்தால் அவதியா? கொப்புளம் சீக்கிரம் போக இத செய்யுங்க.

Image Source: Freepik

Read Next

வெறும் 10 ரூபாய் போதும்… முகத்தை பளீச்சென மாற்ற வீட்டிலேயே சீரம் தயாரிக்கலாம்!

Disclaimer