Home Remedies For Removing Hand Wrinkles: குளிர்காலத்தில் பலரும் பல்வேறு சரும பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த பருவ காலத்தில் குளிர்காற்று வீசுவதால் முகம் மற்றும் கைகளின் சருமம் மிகவும் வறண்டு போகலாம். சருமத்தில் ஈரப்பதம் இல்லாததால், குளிர்காலத்தில் சுருக்கங்கள் ஏற்படலாம். வயது அதிகரிக்கும் போது சருமம் தளர்வாகி, முகம், கை மற்றும் கால்களில் சுருக்கங்கள் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் குளிர்ச்சி, மாசுபாடு அல்லது மன அழுத்தம் காரணமாக சுருக்கங்கள் பிரச்சனை தொடங்கலாம்.
கைகளில் உள்ள சுருக்கங்களால் மிகவும் அசிங்கமாகத் தோன்றலாம். இதற்கு பலரும் ஹேண்ட் கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் சில சமயங்களில் கிரீம் தடவிய பின்னரும் பலன் கிடைக்காமல் போகலாம். இந்த சூழ்நிலையில், சில வீட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவது கைகளில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. இதில் கைகளில் உள்ள சுருக்கங்கள் நீக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Face Massage Daily Benefits: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்யலாமா? அப்ப ஒரு நாளைக்கு எத்தனை முறை மசாஜ் செய்யலாம்
கை சுருக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்
- கைகளில் சருமம் மிகவும் வறண்டு போகும் போது முன்கூட்டியே சுருக்கங்கள் தோன்றலாம்.
- கைகளின் தோல்களில் இறந்த சரும செல்கள் குவியலாம். இதன் காரணமாகவும், கைகளில் சுருக்கங்கள் ஏற்படும்.
- உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் கைகளில் சுருக்கங்கள் ஏற்படும்.
- சோப்பு அல்லது கெமிக்கல் ஹேண்ட் வாஷ் போன்றவற்றை உபயோகிப்பது கைகளில் சுருக்கங்கள் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
- புற ஊதாக் கதிர்கள் வெளிப்படுதல் அல்லது வலுவான சூரிய ஒளி காரணமாகவும் கைகளில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.

கை சுருக்கங்கள் நீங்க வீட்டு வைத்தியம்
கைகளில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். இதில் கை சுருக்கம் நீங்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
ஆலிவ் எண்ணெய்
கைகளில் சுருக்கங்கள் இருப்பின், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி அதைத் தவிர்க்க முடியும். ஆலிவ் எண்ணெய் சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி சுருக்கங்களை நீக்குகிறது. ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கை சுருக்கங்களைப் போக்க இரவில் தூங்கும் முன் கைகளில் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு, கைகளில் உறைகளை அணிந்து கொள்ளலாம். மறுநாள் வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்ட்ம். இவ்வாறு தொடர்து செய்வது கைகளில் உள்ள சுருக்கங்கள் விரைவில் நீங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Banana Peel For Dark Circles: முகத்தின் அழகைக் கெடுக்கும் கண் கருவளையம். வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க.
தக்காளி
உணவுப் பொருளான தக்காளி சுருக்கங்கள் பிரச்சனைக்கு பெரிதும் நன்மை தருகிறது. தக்காளியில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தக்காளியைக் கொண்டு கைகளில் உள்ள சுருக்கங்களை விரைவில் நீக்க முடியும். தக்காளி நடுவில் இருந்து வெட்டி, அதை கைகளில் தேய்க்க வேண்டும். இவ்வாறு 5 நிமிடம் கழித்து தண்ணீரில் கைகளை கழுவி விடலாம். இவ்வாறு தினமும் செய்து வருவது கைகளில் உள்ள சுருக்கங்களை விரைவில் மறைய வைக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சைப் பழத்தில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சையைப் பயன்படுத்துவது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கைகளில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதற்கு எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். கை சுருக்கங்களை நீக்க, எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் தயார் செய்து பயன்படுத்தலாம். முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாற்றை பிழிய வேண்டும். இப்போது அதில் அரை ஸ்பூன் பழுப்பு சர்க்கரை சேர்க்கலாம். இவை இரண்டையும் நன்றாகக் கலந்து கைகளில் தடவி ஸ்க்ரப் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தினால் கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்கலாம்.
இந்த வீட்டு வைத்திய முறைகள் மூலம் கைகளில் ஏற்படும் சுருக்கங்களை எளிதில் நீக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Wrinkles Reducing Tips: முகச்சுருக்கம் சீக்கிரம் மறைய தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்
Image Source: Freepik