Banana Peel For Dark Circles: முகத்தின் அழகைக் கெடுக்கும் கண் கருவளையம். வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க.

  • SHARE
  • FOLLOW
Banana Peel For Dark Circles: முகத்தின் அழகைக் கெடுக்கும் கண் கருவளையம். வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க.


Ways To Use Banana Peels For Dark Spots: இன்றைய காலகட்டத்தில் அதிகளவிலான செல்போன், லேப்டாப், தொலைக்காட்சி பயன்பாடு போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துடன் கண் ஆரோக்கியமும் பாதிக்கலாம். குறிப்பாக வெளிப்புற அழகை கெடுக்கும் வகையில், கண்களைச் சுற்றி கருவளையங்கள் உண்டாகலாம். இதற்கு மற்ற சில காரணங்களாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது, அதிகப்படியான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களாலும் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றலாம். இவ்வாறு கருவளையங்கள் ஏற்படுவது கண்களின் அழகை மட்டுமல்லாமல், முகத்தின் அழகையும் அழிக்கின்றன.

ஒவ்வொரு நபரும் கருவளையத்திலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக பல வகையான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதற்கு இயற்கையான வைத்தியமாக வாழைப்பழத் தோல்களைப் பயன்படுத்தலாம். வாழைப்பழத் தோல்களைப் பயன்படுத்தி கண் கருவளையங்களை எளிதில் நீக்கலாம். கண்களில் ஏற்படும் கருவளையத்தை நீக்க வாழைப்பழத் தோல்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Almond Oil Massage: சருமம் வறண்டு போகாம இருக்க தினமும் 5 நிமிஷம் இந்த எண்ணெயில மசாஜ் செய்யுங்க.

கண் கருவளையம் நீங்க வாழைப்பழம் எப்படி உதவுகிறது?

வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவையே கண் கருவளையத்தை நீக்க பெரிதும் உதவுகிறது. வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக செயல்படும். அதே போல வாழைப்பழத்தோலும் சருமத்திற்கு உதவுகிறது. இதில் கண்கருவளையங்களை நீக்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.

கருவளையம் நீங்க வாழைப்பழத் தோல் பயன்படுத்தும் முறை

கண்களில் ஏற்படும் கருவளையங்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பின்வரும் வழிகளில் பயன்படுத்தலாம்.

நேரடியாக பயன்படுத்துதல்

  • முதலில் 2 வாழைப்பழங்களின் தோலை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதை 20 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின் ஆறியதும் கண்களுக்குக் கீழே தடவ வேண்டும்.
  • அதன் பின் 15 முதல் 20 நிமிடங்கள் கண்களுக்குக் கீழே வாழைப்பழத் தோல்களை மசாஜ் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு மசாஜ் செய்த பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
  • இந்த முறையை வாரம் இருமுறை செய்து வருவதன் மூலம் கண் கருவளையங்களை நீக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Korean Rice Water: கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இது தான் காரணமா.?

கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து பயன்படுத்துதல்

வாழைப்பழத்தோலில் கற்றாழை ஜெல் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் கண்களின் கருவளையத்தை நீக்கலாம்.

  • முதலில் வாழைப்பழத் தோலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதனுடன் 1 டீஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும்.
  • இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே தடவி விடலாம்.
  • பின் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் முகத்தைக் கழுவி விடலாம்.
  • இந்த கண் மாஸ்க்கை வாரம் இருமுறை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்களை நீக்க முடியும்.

எலுமிச்சை மற்றும் தேனுடன் பயன்படுத்துதல்

கருவளையத்தைப் போக்க வாழைப்பழத்தோலுடன் தேன் மற்றும் எலுமிச்சையை கலந்து பயன்படுத்தலாம்.

  • முதலில் இரு வாழைப்பழத் தோலை மிக்ஸியின் நன்றா அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்த பேஸ்ட் தயாரானதும், கலவையைக் கண்களுக்குக் கீழே தடவ வேண்டும்.
  • இவ்வாறு 15 நிமிடங்கள் வைத்து பிறகு சாதாரண நீரில் கழுவிக் கொள்ளலாம்.
  • இந்த முறையை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்துவதன் மூலம் கண் கருவளையத்தைப் போக்கலாம்.

குறிப்பு

கண்களில் ஏற்படும் கருவளையத்தைப் போக்க வாழைப்பழத் தோலை மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு வழியில் பயன்படுத்தலாம். எனினும், சருமம் உணர்திறன் மிக்கது என்பதால் இந்த முறைகளைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்யலாம். பேட்ச் சோதனையின் போது எரியும் உணர்வு, அரிப்பு போன்றவை ஏற்பட்டால் நிபுணர் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Curd Face Pack: தயிர் போன்ற பளபளப்பான சருமத்திற்கு தயிரை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Pimples Removal: உங்க அழகைக் கெடுக்கும் முகப்பருவை ஒரே இரவில் மறைய வைக்கும் வீட்டு வைத்தியம்!

Disclaimer