$
Almond Oil For Dark Circles: முக அழகைக் கெடுக்கும் வகையில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று கண்களில் ஏற்படும் கருவளையம் ஆகும். முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவர். ஆனால் தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாதிப்படைகின்றனர். ஏனெனில், தற்கால சமயத்தில் லேப்டாப், மொபைல் பயன்பாடு மற்றும் வேலைப்பளு காரணமாக தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கண்களில் கருவளையங்கள் பிரச்சனை உண்டாகலாம்.
மேலும் கருவளையங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக ஊட்டச்சத்து குறைபாடும் அமைகிறது. இதனை ஆரம்பத்தில் கவனிக்கும் போதே கருவளையப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஆனால், இதைக் கவனிக்காமல் விடுவதால் அதிகப்படியான கருமை ஏற்படலாம். இது நிரந்தரமான ஒன்றாக மாறிவிடலாம். இதனைத் தவிர்க்க கருவளையப் பிரச்சனைக்கு சிலர் வெளியில் கிடைக்கும் சில விலையுயர்ந்த பொருள்களைப் பயன்படுத்துவர். ஆனால், வீட்டிலேயே இயற்கை வழிகளைக் கையாள்வதன் மூலம் கருவளையப் பிரச்சனையை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Banana Peel For Dark Circles: முகத்தின் அழகைக் கெடுக்கும் கண் கருவளையம். வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க.
கண்களின் கருவளையம் நீங்க பாதாம் எண்ணெய்
கண்களுக்குக் கீழ் உண்டாகும் கருவளையங்கள் நீங்க பாதாம் எண்ணெய் சிறந்த தேர்வாக அமைகிறது. பாதாம் எண்ணெய் ஒரு பல்நோக்கு தயாரிப்பு ஆகும். இது சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிற்கும் சிறந்த மாய்ஸ்சரைசராகப் பயன்படுகிறது. இது சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் ஆரோக்கியமான சரும மேம்பாட்டிற்கும், கருவளையங்களைக் குறைக்கவும் உதவுகிறது.
ஏன் பாதாம் எண்ணெய்?
பாதாம் எண்ணெய் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கண்களுக்குக் கீழே ஏற்படும் கருமை நிறமாற்றத்தைத் தடுக்கிறது.
- பாதாம் எண்ணெய் சிறந்த மென்மையாக்கும் பண்புகளையும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
- பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மோனோசாச்சுரேட்டட் போன்றவை, சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது.
- இது ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிப்பதால், சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.

கருவளையங்களைக் குறைக்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?
கண்களில் கீழ் உள்ள கருவளையங்களைக் குறைக்க பாதாம் எண்ணெயைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
பாதாம் எண்ணெயை நேரடியாக தடவுவது
கண்களின் கருமையான வட்டங்களில் பாதாம் எண்ணெயை நேரடியாக தடவலாம். இது கண்களின் கீழ் உள்ள தோலை பாதிக்காது. இதற்கு விரல் நுனியில் மூன்று முதல் நான்கு சொட்டு பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை படுக்கைக்குச் செல்லும் முன்பாக கருவளையங்களில் சமமாகத் தடவலாம். பின் அடுத்த நாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். சிறந்த முடிவுகளுக்கு இந்த செயல்முறையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பாதாம் எண்ணெயுடன் பால்
பாலில் உள்ள பண்புகள் முதுமை எதிர்ப்பு மற்றும் சருமத்தை மீட்டெடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்றியாகும். இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அழகான மற்றும் பிரகாசமான சருமத்தைத் தருகிறது. இதை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது கருவளையங்களைக் குறைக்கலாம். இதற்கு பால் மற்றும் பாதாம் எண்ணெய் ஒவ்வொன்றிலும் அரை தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு நன்றாகக் கலந்து கருமையான வட்டங்களில் தடவ வேண்டும். இதை உலரவைத்து அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் சாதாரண நீரில் இதைக் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய்
சருமத்தில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கிறது. இதற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டிலும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை கண் இமைகள் மற்றும் கண்களுக்கு கீழ் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இதைத் தடவி வட்ட இயக்கத்தில் 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு முழுவதும் விட்டு, காலையில் சாதாரண நீரில் கழுவ வேண்டும். பாதாம் எண்ணெயுடன், ஆலிவ் எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவது ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய்
ரோஸ் வாட்டரானது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த அழகு சாதனப் பொருள்களில் ஒன்றாகும். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதுடன், தோல் சிவப்பைக் குறைக்கிறது. இதற்கு ரோஸ் வாட்டரை பருத்தி பஞ்சு ஒன்றின் உதவியுடன் தடவ வேண்டும். பின் காயவைத்து, பாதிக்கப்பட்ட சருமத்தில் பாதாம் எண்ணெயை தடவ வேண்டும். இதை இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட வேண்டும். ரோஸ் வாட்டரில் உள்ள வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் பாதிக்கப்பட்ட சருமத்தை ஆற்றுகிறது.
பாதாம் எண்ணெய் மற்றும் தேன்
கண்களின் கருவளையங்களைக் குறைக்க தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். இதில் தேன் ஒரு சிறந்த சரும மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தேனுடன் பாதாம் எண்ணெய் சேர்ப்பது கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இந்த பேக் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இதற்கு அரை டீஸ்பூன் அளவு தேனுடன் மூன்ற் முதல் நான்கு துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த இரண்டு பொருள்களையும் கலந்து கண்களின் இருண்ட வட்டத்தின் கீழே தடவ வேண்டும். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். சிறந்த முடிவுகளைப் பெற இதைத் தினமும் செய்யலாம்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி கண்களின் கீழ் உள்ள கருவளையங்களை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Remove Dark Circles: கருவளையத்தை ஒரே வாரத்தில் நீக்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சியுங்க!
Image Source: Freepik